தமிழ் ஆவணி மாத ராசிபலன் (9 to 12 )


தனுசு


தனுசு ராசி  அன்பர்களே, உங்கள் ராசி நாதன் குரு பகவான் உங்கள் ராசியிலே சஞ்சரித்தாலும், வக்கிரம் பெற்று கேது வுடன் இருப்பதால் தேவையற்ற டென்ஷன் மனகுழப்பம உண்டாகும்.


எளிதில் கோபம் கொள்ள வாய்ப்புள்ளதால் நிதானம் தேவை. அசாதாரணமான சூழ்நிலையில் செயல்படுவதையும், முடிவுகள் எடுப்பதையும் தள்ளிப் போடுவது நல்லது.


தன்னம்பிக்கையே வெற்றிக்கான வழி என்பதை உணர்ந்து செயல்பட்டால் எதையும் சமாளித்து விடுவீர்கள். குடும்ப விஷயங்களில் கவனம் தேவை. வீண்வாக்கு வாதங்களை தவிர்க்க பேச்சை குறைத்து கொள்ளுங்கள். பொருளாதார நிலையில் பிரச்சினை வர வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.

2ல் சனி இருப்பதால் சிக்கனமாக செலவழிப்பது நல்லது. முதியோர் மற்றும் இயலாதவர்களுக்கு உணவளிப்பதால் சனி பகவானின் தாக்கம் குறையும்.


உடன் பிறப்புகளால் ஆதாயம் உண்டு. முயற்சிகளால லாபம் உண்டு. எந்த முடிவையும் எடுத்து செயல்படுத்துவதற்கு முன் நன்கு சிந்தித்து செயல்படுவது நல்லது.


தாய் உடல் நிலையில் கவனம் தேவை. உறவுகளால் மனகசப்புகள் வந்து நீங்கும். பிள்ளைகளின் பிடிவாதம் அதிகரித்தாலும் மகிழ்ச்சி உண்டு. ஷேர் மார்க்கெட்டில் நல்ல லாபம் கிடைக்கும். இருப்பினும் அளவுக்கு மீறினால் விரயம் ஏற்படும்.


காதலில் வெற்றி உண்டு.  கணவன் மனைவிக்குள் மனஸதாபங்கள் வர வாய்ப்புள்ளதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் கவனம் தேவை.

எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு. தந்தையால் அனுகூலம் இருந்தாலும், தந்தையின் கோபத்தால் பிரச்சினை ஏற்படும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் அதிக கவனம் தேவை. உங்கள் திறனை வெளிப்படுத்த இயலாத சூழல் உருவாகும்.

சந்திராஷ்டம நாட்கள்: செப்டம்பர் 13,14,15. ஆகஸ்ட் 17, 18.

பரிகாரம்: ஸ்ரீ காலபைரவரை வியாழக்கிழமையில் பூஜை செய்து வழிபடுவது நன்மை தரும்.


மகரம்


மகர ராசி அன்பர்களே, உங்கள் ராசிக்கு 6 ல் பலமுடன் சஞ்சரிக்கும் ராகு எதிலும் விழிப்புணர்வை தந்து உங்களை உயர்த்தி விடுவார். ஜென்ம சனி மற்றும் விரய குருவின் ஆதிக்கத்தால் மன கசப்புகள், குழப்பம், வீண் விரயம், மறைமுக எதிர்ப்பு இருந்தாலும், அனைத்தையும் சமாளிக்கும் திறனை ராகுவின் அருளால் பெறுவீர்கள்.


குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். பொருளாதார நிலையில் உயர்வு ஏற்படும். உங்கள் பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் உயரும்.  இருப்பினும் எடுக்கும் முயற்சிகளில் கவனம் தேவை. யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். எந்த விஷயத்திலும் முடிவெடுத்து செயல்படுத்துவதற்கு முன் ஒரு முறைக்கு பல முறை முடிவெடுத்து செயல்படுவது நல்லது.

தாய் வழியில் அனுகூலம் உண்டு. உறவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். புதிய வீடு, நிலம் வாங்குவதற்கான முயற்சிகள் கைகூடும்.  மாணவர்கள் கல்வியில் மேன்மை பெறுவார்கள்.  சுக்-ராகு சேர்க்கை இருப்பதால் குழந்தைகள் உடல்நிலையில் கவனம் தேவை. குழந்தைகளால் பிரச்சினை வர வாய்ப்புள்ளதால் குழந்தைகளை கண்காணிப்பில் வைத்து வழிநடத்தி செல்வது நல்லது.


குல தெய்வ வழிபாடு நன்மை தரும். எதிரிகளால் பிரச்சினை வந்தாலும், சமாளித்து வெற்றி பெறுவீர்கள். கணவன் மனைவிக்குள் சிறு, சிறு மன கசப்புகள் வந்தாலும், அன்பும், ஆதரவும் அதிகரிக்கும்.


ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து செல்வதால் இல்வாழ்வு மேன்மை அடையும். எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு.தந்தையால் அனுகூலம் உண்டு. தந்தை உங்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருந்து வாழ்வில் உயர்வை ஏற்படுத்துவார். தொழில் மற்றும் உத்தியோகத்தில் கவனம் தேவை. பனிச்சுமை அதிகரிக்கும். இருப்பினும் உங்கள் திறமையாலும், விடா முயற்சியாலும் அனைத்தையும் உங்களுக்கு சாதகமாக்கி கொள்வீர்கள்.

சந்திராஷ்டம நாட்கள்:செப்டம்பர் 15,16. ஆகஸ்ட் 19,20.

பரிகாரம்:ஸ்ரீ அம்பாளை வெள்ளிக்கிழமையில் பூஜை செய்து வழிபடுவது நன்மை தரும்.


கும்பம்.:


கும்ப ராசி அன்பர்களே, உங்கள் ராசிக்கு 11ல் குரு இருப்பதால் எதிலும் வெற்றி ஏற்படும். நன்மை, தீமையை பகுத்துணர்ந்து செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள்.


தெய்வ பலமும், குருவின் ஆசியும் உங்களை காக்கும். இருப்பினும் யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். எந்த விஷயத்திலும் தீர சிந்திக்காமல் அகல கால் வைக்க வேண்டாம்.


ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உங்கள் பேச்சிற்கு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். பொருளாதார நிலையில் உயர்வு ஏற்படும். நீண்ட நாளாக வர வேண்டிய பணம் வந்து சேரும்.


விலகி சென்ற உறவுகள் விரும்பி வருவார்கள். மனதில் தைரியம், உற்சாகம் அதிகரிக்கும். மனதிற்கு இதமான செய்தி வந்து சேரும். உடன் பிறப்புகள் உதவிகரமாக இருப்பார்கள்.

தாய் உடல்நிலை ஆரோக்கியம் பெரும். வீடு, வாகன பழுது ஏற்பட்டு சரி செய்வீர்கள். குழந்தைகள் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. குழந்தைகளை கண்காணிப்பில் வைத்து வழிநடத்தி செல்வதால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். 


காதலில் பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.  எதிரிகளால் பிரச்சினைகள் உருவாகும். சந் திரன் பலம் பெற்று இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. கணவன் மனைவிக்குள் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும். இருப்பினும் வாழக்கை துணையின் கை ஓங்கும். 


எதிர்பாராத அதிர்ஷ்டமும், தனவரவும் உண்டு. தந்தையால் அனுகூலம் உண்டு. தந்தை உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

தொழில் மற்றும் உத்தியோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். சக ஊழியர்கள், உயரதிகாரிகள் சாதகமாக இருப்பார்கள். உங்கள் திறமை மற்றவர்களால் பாராட்டப்படும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு தேடி வரும்.

சந்திராஷ்டம நாட்கள்:ஆகஸ்ட் 21,22.

பரிகாரம்:ஸ்ரீ நரசிம்மரை சனிக்கிழமையில் பூஜை செய்து வழிபடுவது நன்மை தரும்.


மீனம்.:


மீன ராசி அன்பர்களே, உங்கள் ராசிக்கு 2 ல் செவ்வாய் ஆட்சி பலம் பெற்று சஞ்சரிப்பதால் அஷ்ட லட்சுமியின் அருள் கிடைக்கும். தடைகள் நீங்கி முன்னேற்றம் அதிகரிக்கும்.


மூத்தோர்களின் ஆசியும், தெய்வ அனுகூலமும் உண்டாகும். பேச்சில் அதிகாரம் தெறிக்கும். முன்கோபத்தை தவிர்த்து பேச்சில் தேன் தடவிய வார்த்தையை பயன்படுத்தினால் நன்மை பல விளையும்.


பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். நீண்ட நாளாக வர வேண்டிய பணம் கை வந்து சேரும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.  உடன் பிறப்புகளால் சிறு,சிறு மனஸ்தாபங்கள் வந்து நீங்கும்.

மனதில் அதீத நம்பிக்கையையும், எதிர்மறை சிந்தனையையும் தவிர்த்து எதார்த்தமாக  சிந்திப்பது நல்லது. தாய் உடல் நிலையில் கவனம் தேவை.


தாய் மற்றும் உறவுகளால் மனகசப்புகள் உண்டாகும். வீடு, வாகனம் தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. புதிய சொத்து வாங்குவதற்கான முயற்சிகள் கைகூடும்.


பூர்வ புண்ணிய பலமும், தெய்வ அனுகூலமும் அதிகரிக்கும்.  குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தைகளின் செயல்களால் பெருமை படக்கூடிய சூழல் உருவாகும்.  கணவன் மனைவிக்குள் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் உண்டு.

தந்தையால் அனுகூலம் உண்டு. தந்தை வழியில் தேவையான உதவியும், அரவணைப்பும் கிடைக்கும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் அதிக கவனம் தேவை. அலுவலக ஆவண விஷயங்களில் கவனமாக இருங்கள். உயரதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்து செல்லுங்கள்.

சந்திராஷ்டம நாட்கள்:ஆகஸ்ட் 23,24.

பரிகாரம்:ஸ்ரீ  வெங்கடாஜலபதியை வியாழக்கிழமையில் பூஜை செய்து வழிபடுவது நன்மை தரும்.


மோகனா  செல்வராஜ்