800 கிலோ கஞ்சா பறிமுதல் -மகேஷ் குமார் அகர்வால்


2 மாதங்களில் சென்னையில் 800 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது-மகேஷ் குமார் அகர்வால்


கடற்கரையில் விநாயகர் சிலைகளை கரைப்பதை தடுக்க, சென்னை நேப்பியர் பாலம் முதல் சாந்தோம் வரை மெரினா கடற்கரை காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு பாதுகாப்பு நடவடிக்கை குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் ஆய்வு நடத்தினார்.


அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில் ரவுடிகளுக்கு அனுமதி இல்லையெனவும், கஞ்சா கடத்தலையும், விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். மேலும், கடந்த 2 மாதங்களில் 800 கிலோ கஞ்சாவை செய்துள்ளதாகவும், கஞ்சா, குட்கா, ரவுடிசத்தை குறைக்க கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.