74-வது சுதந்திர தினத்தில் நெகிழ்ச்சியான தருணம்-நெல்லைஆயுதப்படை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி

74-வது ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடும் வேளையில் பாளையங் கோட்டையில் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி தனது தந்தை இறந்த போதிலும் நாட்டிற்கான தனது கடமையைச் செய்வதில் தவறவில்லை என்பதை அறிந்த அதிகாரிகள் அனைவரும் வியப்புற்றனர்.



நெல்லை பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் இன்று நடந்த சுதந்திர தின நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இந்த அணிவகுப்பை தலைமையேற்று நடத்தியது ஆயுதப்படை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி. மகேஸ்வரி அவர்களின் தந்தை நாராயணசுவாமி  (வயது 83 ) நேற்று இரவு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். 


ஆனால் திடீரென்று சுதந்திர தின நிகழ்ச்சியில் அணிவகுப்பும் நடத்துவதற்கு திடீர் என்று ஒருவரை மாற்றியமைக்க முடியாது என்ற சூழ்நிலையில் இன்று காலை 8 மணிக்கு  நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் அணிவகுப்பு மரியாதையை முடித்து உடனடியாக தனது தந்தை உயிரிழந்த துக்க நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார்.

காவல் ஆய்வாளர் மகேஸ்வரியின் கணவர் பாலமுருகன் நெல்லை மாநகர காவல்துறை நுண்ணறிவுப் பிரிவு காவலராக இருக்கிறார்.  கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக அவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார்.


நேற்று குணமடைந்து மீண்டும் பணிக்கு வந்து விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.