இன்று அதிகமானோர் பணம் பரிமாற்றம் செய்வதற்காக பேடிஎம் செயலியை உபயோகித்து வருகின்றனர். அந்த வகையில், சென்னை, பார்க்டவுன் பகுதியை சேர்ந்த ரவிக்குமார் என்ற நபர் இந்த செயலியை உபயோகித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 18-ம் தேதி, இவரது பேடிஎம் சேமிப்பு கணக்கில் வைத்திருந்த ரூ.47, 705 பணத்தை திருடி விட்டதாக, இவரது போனிற்கு குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது.
இதனையடுத்து, ரவிக்குமார், சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து போலீசார் ரவிகுமாரிடம் விசாரணை மேற்கொண்டதில், இவர் எந்த பணபரிமாற்றமும் செய்யவில்லை என்பது தெரியவந்தது.
இந்நிலையில், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்ட பேடிஎம் நிறுவனத்திடம் விளக்கம் கேட்க முடிவு செய்துள்ளது.