பிலிப்பைன்ஸில் இன்று காலை 6.4 ரிக்டர் நிலநடுக்கம்

 இன்று  காலை பிலிப்பைன்ஸின் தலைநகர் மணிலா அருகே 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று ஐரோப்பிய மத்தியதரைக் கடல் நில அதிர்வு மையம் (ஈ.எம்.எஸ்.சி) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி பிலிப்பைன்ஸின் மணிலாவிலிருந்து 451 கி.மீ தென்கிழக்கில் (எஸ்.இ) இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காலை 5:33 ஏற்பட்டதாக கூறப்படுகிறது.