அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தை தாக்கிய லாரா புயல்.
அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் கேமரான் என்ற இடத்தின் அருகே 150 மைல் வேகத்தில் லாரா எனும் புயல் கரையை கடந்த போது பலத்த காற்று வீசியதால் கடல் அலைகள் பல அடி உயரத்திற்கு எழுந்துள்ளது.
கடந்த 160 ஆண்டுகளில் இதுபோன்ற ஒரு புயல் அப்பகுதியை இதுவரை தாக்கியதில்லையாம்.
இதனால் ஆயிரக்கணக்கான வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கொரோனா தாக்கம் அச்சம் உள்ளவர்கள் ஹோட்டல் அறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
லேக் சால்ஸ் பகுதியில் இருப்பவர்கள் வெள்ள பாதிப்பை கண்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு அவ்வளவாக புயல் அச்சமில்லை,
முன்னெச்சரிக்கையாக டெக்சாஸ் மற்றும் லூசியானாவில் 2 லட்சத்து 70 ஆயிரம் வீடுகளில் தற்போது மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளது.
அமெரிக்காவை 280கி.மீ வேகத்தில் தாக்கிய லாரா சூறாவளி புயல் ஏற்படுத்திய பெரும் சேதத்தை பார்வையிட்டுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப், பேரழிவாக அறிவித்துள்ளார்.