சீன வெள்ளப்பெருக்கு - 233 அடி புத்தர் சிலை


சீனாவில் கடும் மழைப்பொழிவு காரணமாக யாங்சே ஆறு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.


வெள்ளத்தை கட்டுப்படுத்த சீனாவில் கட்டப்பட்ட நீர்மின்நிலையத்திற்கு  வினாடிக்கு 74000 கனஅடி தண்ணீர் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. இருந்தாலும், தற்போது உருவாகியுள்ள வெள்ளமானது, நீர்நிலைகள் மற்றும் அணைக்கட்டுகளால் கட்டுப்படுத்த முடியாது என கூறப்படுகிறது.


இந்த கடும் வெள்ளப்போக்கானது, கிச்சுவான் மாகாணத்தில் உள்ள 233 அடி புத்தர் சிலையின் காலடியை தொட்டு செல்லும் அளவிற்கு உயர்ந்துள்ளது.


இதற்கு முன்னர் 1949இல் ஏற்பட்ட வெள்ளம் தான் பிரமாண்ட புத்தர் சிலையின் காலை தொட்டது என வல்லுநர்கள் கூறுகின்றனர்.இது தொடர்பாக அந்நாட்டு நீர்வளத்துறையானது பல பகுதிகளுக்கு ரெட் அலர்ட் கொடுத்திருந்தது. ஆனால், குறிப்பிட்ட அளவை விட நீர் 5 மீட்டர் அதிகளவு வெள்ள நீர் அளவு உயரும் என கூறப்படுகிறது.