இன்றைய ராசிபலன் 22/08/2020 


மேஷம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு நல்ல தகவல் வரும்.உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொட்டது துலங்கும் நாள்.


ரிஷபம்: பழைய பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். குலதெய்வ பிரார்த்தனைகளை குடும்பத்துடன் சென்று நிறைவேற்றுவீர்கள்.வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். கனவு நனவாகும் நாள்.


மிதுனம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். பூர்வீக சொத்து கைக்கு வரும். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.


கடகம்: திடீர் பணவரவு, செல்வாக்கு உண்டு. பழுதான வாகனத்தை மாற்றி புதியது வாங்குவீர்கள். மனதில் நிலவிவந்த அச்ச உணர்வு விலகும். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள்.
சிம்மம்: சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு சமயோசிதமாகப் பேசும் சாமர்த்தியம் வரும். ஓரளவு பணவரவு உண்டு. பால்ய நண்பரை சந்தித்து முக்கிய முடிவு எடுப்பீர்கள்.கோபம் குறையும். சுப நிகழ்ச்சி
களில் கலந்துக் கொள்வீர்கள்.


கன்னி: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். வேலைச்சுமை அதிகரிக்கும். எளிதில் முடியும் விஷயங்கள்கூட இழுபறியாகும். வாயு கோளாறால் சில பிரச்சினைகள் ஏற்படக் கூடும். கலைப்பொருட்கள் சேரும்.


துலாம்: வெளிவட்டாரத்தில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டு. திடீர் செலவுகளும் இருக்கும். வாகனம், வீடு பராமரிப்பு செலவுகள் அதிகமாகும். வெளியூர் பயணம் செல்ல திட்டமிடுவீர்கள்.குடும்பத்தினரை அனுசரித்து போங்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள்.


விருச்சிகம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வீடு, மனை வாங்குவதற்கான காலம் கனிந்து வரும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். சிறப்பான நாள்.
தனுசு: புதிய திட்டங்கள் நிறைவேறும். பூர்வீகச் சொத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். பிள்ளைகள் ஆக்கப்பூர்வமாக செயல்படுவார்கள். பணவரவு திருப்தி தரும்.  உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர் நண்பர்களால் ஆதாயமுண்டு. பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.


மகரம்: சோம்பல் நீங்கி உற்சாகமாக காணப்படுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். புத்துணர்ச்சியுடன் காணப்படவீர்கள்.. நவீன மின்சாதனங்கள் வாங்குவீர்கள். திடீர் பயணம் ஏற்படலாம். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும்.


கும்பம்: சந்திராஷ்டமம் இருப்பதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலைகள் வந்து செல்லும்.வீண் பயம், கவலைகள் வந்து நீங்கும். பேச்சில் நிதானம் அவசியம். மின்சார சாதனங்களை கவனமாக கையாளுங்கள். அக்கம்பக்கத்தினர் எரிச்சலை ஏற்படுத்துவார்கள்.


மீனம்: குடும்பத்தில் நிம்மதி உண்டு. அலைச்சல் குறையும். வாகனம் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். மனைவிவழி உறவினர்களால் அனுகூலம் உண்டு.  பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு.

மோகனா  செல்வராஜ்