கேன்சர் செல்களை வளர விடாமல் அழிக்கும் ஏழு உணவுகள் பகுதி 2

அன்பு வாசகர்களே


கேன்சர் செல்களை வளர விடாமல் அழிக்கும் ஏழு உணவுகள் பகுதி 2



புற்றுநோயில் பல வகைகள் உண்டு. மார்கப் புற்றுநோய், குடல் புற்றுநோய், விதைப்பை புற்றுநோய், கர்பப்பை புற்றுநோய், தோல் புற்றுநோய் என நிறைய வகைகள் உண்டு. ஒவ்வொரு வகைக்கும் வெவ்வேறு வகையான காரணங்கள் உண்டு.


தக்காளி:


தக்காளி சிவப்பாக இருப்பதற்கு அதில் காணப்படும் லைக்கோபீன் என்ற பொருள் தான் காரணம். இந்த லைக்கோபீன் பொருளில் புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றல் உள்ளது.


தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் படி, தக்காளியை சாண்ட்விட்ச், சாஸ், கெட்சப், சாலட்டுகள் போன்றவற்றில் அதிகளவு பயன்படுத்தி வாருங்கள்.


இது உங்களுக்கு புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றலை தரும்.


பீன்ஸ்:


பீன்ஸில் அதிகளவு நார்ச்சத்து இருப்பதால் இது குடல் புற்றுநோயை போக்கும் ஆற்றல் கொண்டுள்ளது என்பது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.


குடல் புற்று நோய் கொண்ட நபர்களுக்கு பீன்ஸை உணவில் சேர்க்க சொன்ன போது அவர்களின் புற்றுநோய் கட்டிகளின் வீரியம் குறைந்திருப்பது தெரிய வந்தது.


ஊட்டச்சத்து மற்றும் புற்றுநோய் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின் படி பீன்ஸ் புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியை 75 சதவீதம் தடுக்கும் திறன் கொண்டு இருப்பது தெரிய வந்தது.


பிரக்கோலி:


பிரக்கோலியில் சல்போராபேன் என்ற பொருள் உள்ளது. இது புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றலை கொண்டுள்ளது.


கிளினிக்கல் கேன்சர் ரிசர்ச் இதழில் வெளியிடப்பட்ட 2010 ஆம் ஆண்டின் ஒரு ஆய்வின்படி,குறிப்பாக பெண்களுக்கு வரும் மார்பக புற்றுநோயை 50 சதவீதம் வரை குறைக்க கூடியது என்கிறது ஆராய்ச்சி தகவல்கள்.


எனவே பிரக்கோலியில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் காணப்படுவதால் இதை சாலட்டுகள், சூப்கள், சாண்ட்விட்ச்கள் போன்றவற்றில் நீங்கள் சேர்த்து பயன்படுத்தி வரலாம்.


அதே மாதிரி பெருங்குடல் புற்றுநோயை தடுக்கவும் பிராக்கோலி உதவுகிறது.


பெர்ரி:


நாம் சாப்பிடும் ஸ்ட்ராபெர்ரி, ப்ளூ பெர்ரி, பிளாக் பெர்ரி என எல்லாவற்றிலும் ஆந்தோசயனின் என்ற ஆக்ஸினேற்றிகள் நிறையா காணப்படுகின்றன.


இந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றவும் வலுவான நோயெதிப்பு சக்தியை உருவாக்கவும் உதவுகிறது.


புற்றுநோய் ஆராய்ச்சிகளின் படி பெர்ரி களில் 62 சதவீதம் புற்றுநோயை குறைக்கும் ஆற்றல் காணப்படுகிறது.


ராஸ் பெர்ரி போன்றவை 54 சதவீதம் உணவுக் குழாய் புற்றுநோயை தடுக்கிறது. மேலும் பெருங்குடல் புற்றுநோயையும் தடுக்கின்றன. எனவே பெர்ரி பழங்களை உங்கள் உணவில் சேர்த்து வாருங்கள்.


இலவங்கப்பட்டை:


இலவங்கப்பட்டையில் இரத்த சர்க்கரை மற்றும் அழற்சியை போக்கும் தன்மை காணப்படுகிறது. பொதுவாக இலவங்கப்பட்டையை எடை இழப்புக்காக பயன்படுத்துவர்.


ஆனால் இலவங்கப்பட்டை புற்றுநோயை தடுக்கவும் உதவுகிறது என்கிறது ஆராய்ச்சி. பட்டை புற்றுநோய் கட்டிகள் பரவுவதை தடுத்து நிறுத்துகிறது.


குறிப்பாக பட்டை யிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்கள் தலை மற்றும் கழுத்தில் வளரும் புற்றுநோய் செல்களை குறைக்கின்றன. எனவே தினமும் 1/2-1 டீ ஸ்பூன் அளவு பட்டை பொடியை சேர்த்து வாருங்கள். இது உங்களுக்கு புற்றுநோயை தடுக்கும் ஆற்றலை கொடுக்கும்.


மஞ்சள்:


மஞ்சள் நாம் பாரம்பரியமாக பயன்படுத்தும் ஒரு பொருளாகும். மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற பொருள் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்கள் மாதிரி செயல்படுகிறது.


இதனால் இதற்கு புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் காணப்படுகிறது. குறிப்பாக மஞ்சள் குடல் புற்றுநோயை குறைக்கும். மேலும் மற்றொரு ஆராய்ச்சியில் தெரிய வந்தது என்னவென்றால் குர்குமின் பொருள் கழுத்து மற்றும் தலையில் ஏற்படும் புற்றுநோய் செல்களை அழிக்கிறது.


அதுமட்டுமல்லாமல் மஞ்சள் நுரையீரல், மார்பக மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய்களையும் வராமல் தடுக்க உதவுகிறது. எனவே மஞ்சளை தவறாமல் உங்கள் உணவில் சேர்த்து வாருங்கள் என்கிறார்கள் மருத்துவர்கள்.


கேரட்:


பொதுவாக கேரட் நம் கண் பார்வைக்கு நல்லது என்று தெரியும். ஆனால் உண்மையில் கேரட்டில் புற்றுநோயை தடுக்கும் ஆற்றலும் காணப்படுகிறது.


இரைப்பை புற்றுநோய் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, கேரட் வயிற்று புற்றுநோயின் அபாயத்தை கிட்டத்தட்ட 26% குறைக்கும் என்பது தெரிய வந்துள்ளது.


அதே மாதிரி புரோஸ்டேட் மற்றும் நுரையீரல் புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் கொண்டும் காணப்படுகின்றன.


எனவே கேரட்டை பச்சையாகவோ அல்லது பொரியல், வேக வைத்தோ சாப்பிட்டு வரலாம். உங்கள் உணவில் இனி கேரட்டையும் தவறாமல் சேருங்கள்


இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் சமையல்  பயணம் தொடரும்.


வணக்கம் அன்புடன் கார்த்திகா