இன்றைய நாள் (16.08.2020) ராசி பலன்கள்

இன்றைய நாள் (16.08.2020) எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்
மேஷம் : இன்றைய நாள் உங்களுக்கு ஆக்கப்பூர்வமாக அமையும். நீங்கள் மன உறுதியுடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியை தரும்.சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். துணிச்சலுடன் செயல்பட வேண்டிய நாள்.


ரிஷபம் : எதிர்காலத்தை பற்றிய சிந்தனைகள் இன்று இருக்கும். தொழில் சம்பந்தமாக நீங்கள் தொடர்புகளை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். உணர்ச்சிவசப்படுவதை தவிர்க்க வேண்டும்.உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். மகிழ்ச்சியான நாள்.


மிதுனம் : ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மறதியால் பிரச்சினைகள் வந்து நீங்கும்.செயல்களை குறித்த நேரத்தில் செய்து முடிப்பது நல்ல பலனை தரும். சின்னசின்ன எதிர்மறை விஷயங்களுக்கு வருந்தி அமைதியை கெடுத்து கொள்ளாதீர்கள்.


கடகம் : நீங்கும்.விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள்.செயல்களை கவனமுடன் செய்ய வேண்டும். ஆர்வத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். உடல் அசதி சோர்வு வந்து விலகும். 


சிம்மம் : குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள்இன்றைய நாள் சிறப்பானதாக அமையும். உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அது உங்களுக்கு மகிழ்ச்சியை தரும்.அரசால் அனுகூலம் உண்டு. 


கன்னி : எதையும் தாங்கும் மனோபலம் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள்.இன்று ஆர்வமுடன் செயல்படுவீர்கள். இன்று நீங்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.மதிப்பு கூடும் நாள்


துலாம் : கணவன்- மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும்.முக்கிய முடிவுகள் எடுப்பதை இன்று தவிர்க்கவேண்டும். கவனமுடன் செயல்பட வேண்டும். இன்றைய நாளை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும்.


விருச்சிகம் : சந்திராஷ்டமம் தொடர்வதால் உங்களை அறியாமலேயேஒரு வித படபடப்பு தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும் இன்றைய நாள் மந்தமாக இருக்கும். உங்கள் வளர்ச்சியை பாதிக்கும் தேவையற்ற உணர்வுகளுக்கு இடம் அளிக்காதீர்கள். எதனையும் லேசாக எடுத்து கொள்ளுங்கள்.


தனுசு : இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பாக அமையும். முக்கிய முடிவுகளை இன்று நீங்கள் எடுக்கலாம். மனைவி வழியில் அனுகூலம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். நீங்கள் நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள்.


மகரம் : உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். புதிய தொடர்புகள் புதிய நட்பு வட்டாரம் இன்று உங்களுக்கு அமையும்.உத்தியோகத்தில் உயரதிகாரிகள் மெச்சும் படி நடந்து கொள்வீர்கள். அமோகமான நாள்.


கும்பம் : பொறுப்புகள் அதிகமாக காணப்படும். பதட்டத்தை தவிர்க்கவேண்டும்.நட்பால் ஆதாயம் உண்டாகும். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.புது தொழில் தொடங்குவீர்கள். புதுமை படைக்கும் நாள்.


மீனம் : முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். முக்கியமான செயல்களை நாளை தள்ளி போடுங்கள். நம்பிக்கையை  இழக்காதீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. 
மோகனா  செல்வராஜ்