செப்டம்பர் 1 முதல் வுஹானில் பள்ளிகள் திறப்பு

 வுஹானின்  செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.


தற்போது உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸின் பிறப்பிடம் என  வுஹான் நகரை கூறப்படுகிறது. 


இந்நிலையில், மத்திய சீன நகரமான வுஹானில் உள்ள ஆரம்ப பள்ளிகள் மற்றும் மழலையர் பள்ளிகள் வருகின்ற செப்டம்பர் 1 ஆம் தேதி தொடங்கவுள்ளது.


தொற்றுநோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் நடைமுறையில் உள்ளன என்று நகராட்சி அரசு தெரிவித்துள்ளது.


வுஹானில் 2,842 நடுத்தர மற்றும் தொடக்கப் பள்ளிகள் மற்றும் மழலையர் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் கிட்டத்தட்ட 1.4 மில்லியன் மாணவர்கள் உள்ளனர். 


மாணவர்கள் வளாகத்தில் முகமூடி அணியத் தேவையில்லை, பள்ளி வெளியே முகமூடிகளை அணியவும், முடிந்தால் பொது போக்குவரத்தைத் தவிர்க்க வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.