கேன்சர் செல்களை வளர விடாமல் அழிக்கும் ஏழு உணவுகள் பகுதி 1

அன்பு வாசகர்களே


கேன்சர் செல்களை வளர விடாமல் அழிக்கும் ஏழு உணவுகள் பகுதி1உலக அளவில் உயிரைக் குடிக்கும் இரண்டாவது பெரிய நோயாக கேன்சர் இருக்கிறது. புற்றுநோய் என்பது மனிதர்களுக்கு வரும் கொடிய நோயாக உள்ளது. இந்த புற்றுநோயை விரட்ட ஏராளமான மருந்துகள் இருந்தாலும் நாம் உண்ணும் உணவுகள் கூட புற்றுநோயை விரட்ட துணை புரிகிறது என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.


புற்றுநோய் மக்களை அச்சுறுத்தும் ஒரு கொடிய நோயாக இருந்து வருகிறது. இன்று வரை உலகளவில் 500 க்கும் மேற்பட்ட புற்றுநோய்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.


புற்றுநோய் நம் உடலில் உள்ள ஆரோக்கியமான செல்களை எல்லாம் அழித்து புற்றுநோய் கட்டிகளாக வளர்ச்சி பெற வைத்து விடுகிறது.


இந்த புற்றுநோய் கட்டிகள் நம் உடலில் ஒரு உறுப்புகளைக் கூட விட்டு வைப்பதில்லை. இதன் அறிகுறிகளை முன்னரே கண்டறிய முடியாமல் ஏராளமான மக்கள் புற்றுநோயால் இறந்து வருகின்றனர்.


இந்த உணவுகளில் காணப்படும் சில வகை மூலக்கூறுகள் புற்றுநோயை விரட்டும் ஆற்றலை கொண்டுள்ளது.


எனவே உங்களுக்கு ஏற்படும் புற்றுநோய் அபாயத்தை குறைக்க இந்த மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம் என்கிறது இந்த கட்டுரை.


உயிரைக் கொல்லும் கொடுமை


இந்த புற்றுநோய்கள் வந்த பிறகு குணப்படுத்துவதை விட அதை வராமல் தடுப்பது சிறந்தது என்கிறார்கள் மருத்துவர்கள்.


எனவே புற்றுநோய் வராமல் தடுப்பதில் நம் அன்றாட உணவுகள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் உணவில் சேர்த்துக் கொள்ளும் சில வகை உணவுப் பொருட்கள் மற்றும் காய்கறிகள், பழங்கள் போன்றவை புற்றுநோய் வராமல் காக்க உதவி செய்கிறது.


இந்த வகை உணவுகளில் இயற்கையாகவே புற்றுநோயை தடுக்கும் மருத்துவ குணங்கள் பொதிந்து கிடக்கின்றன. இவை புற்றுநோயை விரட்டுகிறது என்பது மருத்துவர்களால் நிரூபிக்கப்பட்ட ஒன்றாக உள்ளது. சரி நமக்கு வரும் புற்றுநோயை தடுக்க எந்த வகையான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். வாங்க தெரிஞ்சுக்கலாம் ​எதனால் வருகிறது?


பதப்படுத்தப்பட்ட உணவுகள், இறைச்சிகள், காற்று மாசுபாடு, கலப்பட உணவுகள், புகைப்பிடித்தல் மற்றும் மதுப்பழக்கம் போன்ற காரணங்கள் நமக்கு புற்றுநோய் ஏற்படக் காரணமாக அமைகின்றன.


இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் சமையல்  பயணம் தொடரும்.


நாளை பகுதி 2 தொடரும்வணக்கம் அன்புடன் கார்த்திகா