கொரோனா கிடுகிடு உயர்வு.. திருப்பதியில் முழு ஊரடங்கு

கொரோனா கிடுகிடு உயர்வு.. திருப்பதியில் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிப்பு.



திருப்பதி: திருப்பதியில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதை தொடா்ந்து, 15 நாட்கள் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என சித்தூா் மாவட்ட ஆட்சி தலைவர் நாராயண பரத் குப்தா அறிவித்துள்ளார்.


ஆந்திராவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் கடுமையாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக ஒரே நாளில் 5 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஆந்திராவில் உறுதியானது. ஆந்திராவில் மின்னல் வேகத்தில் கொரோனா பரவி வருகிறது.


அர்ச்சகர்களுக்கு கொரோனா


அதன் பின்னர் திருப்பதி திருமலையில் பணியாற்றும் 15 அர்ச்சகர்கள், தேவஸ்தான ஊழியர்கள், பாதுகாப்பு ஊழியர்கள், லட்டு தயாரிக்கும் ஊழியர்கள் என 160 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கோயிலின் பெரிய ஜீயர் பாதிப்பு


கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட சீனிவாச மூர்த்தி (75) என்பவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலின் பெரிய ஜீயர் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயருக்கு (வயது 67) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருப்பதியில் இருக்கும் ஸ்ரீவெங்கடேஸ்வரா மருத்துவ விஞ்ஞான கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


திருப்பதில் முழு ஊரடங்கு நாட்களில் காலை 6 மணி முதல் 11 மணிவரை மட்டுமே கடைகள், உணவகங்கள், மதுந்துக் கடைகள் உள்ளிட்டவை திறந்திருக்க வேண்டும்.. அதற்கு பின் பால், மருந்தகங்கள் மட்டுமே திறக்க வேண்டும். திருப்பதி நகர மக்கள் பகல் 11 மணிக்குப் பிறகு வெளியில் நடமாட அனுமதியில்லை என்று மாவட்ட ஆட்சி தலைவர் நாராயண பரத் குப்தா தெரிவித்தார்.