ஆரோக்கியம் தரும் கறிவேப்பிலை சாதம்

 



கறிவேப்பிலை:



கறிவேப்பிலையின் 12 விதமான மருத்துவ பயன்கள்
1) இரத்த சோகையைக் குணப்படுத்துகிறது:
2) வயிற்றுப் போக்கு மற்றும் மூலநோய் சிகிச்சைக்கு உகந்தது:
3) குமட்டல் மற்றும் தலைச்சுற்றுக்குத் தீர்வு:
4) சீரான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது:
5) வேதிச்சிகிச்சையால் ஏற்படும் (கீமோதெரபி) பக்க விளைவுகளைக் குறைக்கிறது:
6) தோலில் ஏற்படும் நோய்த் தொற்றினைக் குணப்படுத்துகிறது:
7) கண்பார்வையை மென்மேலும் உறுதியாக்கிறது:
8) கல்லீரலைப் பாதுகாக்கிறது:
9) கெட்டக் கொழுப்பினைக் குறைக்கிறது:
10) முடியை வலுவாக்குகிறது:
11) நீரிழிவு நோய்க்குத் தீர்வு கிடைக்கிறது:
12) செரிமான மண்டலத்திற்கு நல்லது


ஆரோக்கியம் தரும் கறிவேப்பிலை சாதம் செய்ய...!!


தேவையான பொருட்கள்:

 

அரிசி - 1/2 கிலோ

கறிவேப்பிலை - 3  கப்

கடலைப்பருப்பு - 2 ஸ்பூன்

மிளகுத்தூள் - ஒரு ஸ்பூன்

கடுகு - தாளிக்க

உளுத்தம்பருப்பு - தாளிக்க

முந்திரிப்பருப்பு - 10 கிராம்

நல்ல எண்ணெய் தேவையான அளவு

நெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

 


செய்முறை:

 

சிறிதளவு நெய்யில் கறிவேப்பிலையை வறுத்து பொடி செய்து கொள்ளவும். அரிசியை சாதமாக வடித்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து நல்ல எண்ணெய்  ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து.அதனுடன் முந்திரிப் பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து பொன்னிறமாக வறுத்து  எடுக்கவும்.

 

பாத்திரத்தில் உள்ள சாதத்தில் கறிவேப்பிலைத் தூள், வறுத்த முந்திரி மற்றும் கடலைப் பருப்பு, மிளகுத் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறினால் சுவையான ஆரோக்கியம் தரும் கறிவேப்பிலை சாதம் தயார்.

 

 

மோகனா செல்வராஜ்