சென்னையில் இரண்டாவது முறையாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை மிக குறைவு என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்..
சென்னையில் உள்ள சந்தைகளில் மேற்கொள்ள வேண்டிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வியாபாரிகள், வருவாய் துறை அதிகாரிகளுடன் மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையர் பிரகாஷ் ஆலோசனையில் ஈடுபட்டார்..
பின்னர் பேட்டியளித்த அவர், சென்னையில் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், மக்கள் அதிகளவில் கூடும் சந்தைகள், வங்கிகள், நியாயவிலை கடைகளில் கூட்டத்தை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்..
சென்னையில் உள்ள 81 சந்தைகளை தனிதனியாக கண்காணிக்க நிர்வாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த குழுக்கள் தினந்தோறும் சந்தைகளை ஆய்வு செய்வதாகவும் தெரிவித்தார்..
மேலும், சந்தைகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றால் சீல் வைக்கப்படும் என எச்சரித்த அவர், இரண்டு நாட்களுக்குள் அனைத்து சந்தைகளிலும் சிசிடிவி பொருத்தப்படும் என தெரிவித்தார்..
கோயம்பேடு சந்தையை மீண்டும் செயல்படுத்துவது குறித்து அதிகாரிகளிடையே ஆலோசனை நடைபெற்று வருவதாகவும், தற்காலிக சந்தைகளை சூழ்நிலைக்கு ஏற்ப பழைய இடத்திற்கு மாற்றம் நடவடிக்கை தொடங்கியிருப்பதாக தெரிவித்தார்..
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா!
கலெக்டர் பொன்னையாவுக்கு நடத்திய கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டதாக கலெக்டர் அலுவலக வட்டார தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியில் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டதால், அப்பகுதியில் அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் மாவட்ட கலெக்டர் பொன்னையாவுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் கலெக்டர் தனிமைப்படுத்தி கொண்டுள்ளதால் காஞ்சிபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதேபோன்று காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையாவுக்கு பிறகு கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் 2வது கலெக்டராக கோவை மாவட்ட கலெக்டர் ராசாமணி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரு தினங்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். அதன்பிறகு தனிமையில் இருந்து வந்தார். அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவு நேற்று வந்தது. அதில், அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தனி வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.