தினமும் நான்கு முந்திரி பருப்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

தினமும் நான்கு  முந்திரி பருப்பு சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்இந்தியாவில் இனிப்புகளில் மட்டுமே சேர்க்கப்படும் ஒரு ஆரோக்கியமான பொருள் என்றால் அது முந்திரிதான். முந்திரி பிடிக்காது என்று கூறுபவர்கள் மிக மிக சொற்பமே. இனிப்புகளில் முந்திரியை தேடி தேடி சாப்பிடுபவர்களே இங்கு அதிகம். இதற்கு குழதைகளை பெரியவர்கள் என்ற விதிவிலக்கல்ல. இதற்கு காரணம் அதன் சுவைதான்.

முந்திரி பருப்பு சுவையான உணவாக மட்டும் இல்லாமல் ஆரோக்கியமான உணவாகவும் இருக்கிறது. பொதுவாக நிலவும் ஒரு கருத்து முந்திரி சாப்பிடுவது பல பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆனால் இது முழுவதும் உண்மையல்ல. அளவுக்கு அதிகமாக சாப்பிடும்போது மட்டுமே இது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். குறிப்பிட்ட அளவில் சாப்பிடும்போது இது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும்.முந்திரி பருப்பில் அதிகமாக கலோரி உள்ளது. உடலுக்கு தேவையான நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிம தாது, இரும்பு, காப்பர், செலினியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், மற்றும் துத்தநாகம் போன்ற கனிம தாதுப்பொருள்கள் அதிக அளவில் உள்ளது.


மேலும் தாவர வேதியங்கள் அல்லது தாவர ஊட்டச்சத்துகள், நோய் எதிர்ப்பூக்கிகள் மற்றும் புரதங்களும் முந்திரி பருப்பில் அதிகமாக உள்ளது 
 
புற்றுநோயினை வராமல் தடுக்கிறது. தினசரி சிறதளவு முந்திரிப் பருப்பைச் சாப்பிட்டுவந்தால், ரத்தஅழுத்தம் சீராக இருக்கும். சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.
 
செல்கள் முதிர்ச்சி அடைவதை கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு. முந்திரி பருப்பில் இதயத்திற்கு நன்மை தரக்கூடிய கொலஸ்ட்ரோல் உள்ளது. உடலுக்கு தீமை விளைவிக்ககூடிய கொலஸ்டிராலை குறைத்து நன்மை தரக்கூடிய கொலஸ்டிராலை அதிரிக்க செய்கிறது.


 செரிமான பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்கலாம். உயிரணு உற்பத்தி, ஜீரணம் ஆகியவற்றிலும் பங்கெடுக்கிறது. 
 
சருமத்தை தாக்கும் புறஊதாக்கதிர்களை வடிகட்டும் திறன் உண்டு. எலும்பு வலுவடைவதற்கு உதவுகிறது. பற்களின் ஆரோக்கியத்தையும், ஈறுகளின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.


மற்ற பருப்புகளுடன் ஒப்பிடும்போது முந்திரி பருப்பில் குறைந்தளவு கொழுப்பே உள்ளது குறிப்பாக இதய ஆரோக்கியத்திற்கு முக்கியமான ஒலிசிக் அமிலம் உள்ளது. இதில் உள்ள கொழுப்பு மற்றும் ஆன்டிஆக்சிடன்ட் பண்புகள் உங்களை மாரடைப்பிலிருந்து பாதுகாக்கும்.
 
உயர் இரத்த அழுத்தம், தசை இறுக்கம், ஒற்றை தலைவலி  போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம். உடலுக்கு நோயெதிர்ப்பு திறனைஅதிகரிக்க செய்கிறது.

 


முந்திரியில் மக்னீசியம் உள்ளது. கால்சியம் போலவே மக்னீசியமும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது என்று அனைவரும் அறிவோம். நமது எலும்புகளில் நிறைய மக்னீசியம் உள்ளது. இதில் உள்ள எலாஸ்டின் எலும்புகளின் அமைப்பிற்கும், வலிமைக்கும் உதவி புரிகிறது.

முடி மற்றும் தோலுக்கு நிறம் கொடுக்கும். கண்ணில் உள்ள கரு விழி படலத்தை பாதுகாக்க உதவுகிறது.உங்கள் முடியின் நிறத்திற்கு காப்பர் மிகவும் அவசியமான ஒன்று. காப்பர் அதிகளவு உள்ள முந்திரியை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளும் போது அது நீங்கள் விரும்பும் அடர்த்தியான கருப்பு நிற முடியை வழங்கும்.
முந்திரி பருப்புகளை உணவில்  சேர்த்துக்கொண்டாலே மேற்கூறிய கனிம தாதுக்கள் குறைப்பாட்டினால் வரக்கூடிய நோய்களை தடுக்கலாம்.


மற்றும் ஒரு சமையல் குறிப்புடன்


வணக்கம் அன்புடன் கார்த்திகா