உலகம் முழுவதும் கொரோனா

 உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5.86 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,86,774 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 1,36,89,917 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 8,03,6499 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 59,616 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.83.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.78.22-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. 


கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கறுப்பர் கூட்டம் என்ற You Tube சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து விமர்சித்து அவதூறு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர். இது குறித்து சென்னை மத்தியகுற்றப்பிரிவில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் விசாரணை செய்து வழக்கில் சம்பந்தப்பட்ட வேளச்சேரியை சேர்ந்த செந்தில்வாசன் என்பவரை கைது செய்து மத்தியகுற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  வருகின்றனர்.