கடன் திரும்ப செலுத்த மல்லையா தயார்


 


தொழில் அதிபர் விஜய் மல்லையா  வங்கிககளில் 9000 கோடி ரூபாய் கடன் வாங்கி அதை திரும்ப செலுத்தாமல் ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு தப்பி ஓடினார்.


மல்லையாவுக்கு எதிராக வங்கிகள் கூட்டமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. 


சிறை தண்டனையை தவிர்ப்பதற்காக தொழில் அதிபர் விஜய் மல்லையா வங்கிகளில் வாங்கிய கடன்களை வட்டியுடன் சேர்த்து மொத்தமாக 14 ஆயிரம் கோடி ரூபாயாக திரும்ப செலுத்த தயாராக இருப்பதாக அவரது வழக்கறிஞர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.14 ஆயிரம் கோடி ரூபாய் கடன் திரும்ப செலுத்த மல்லையா தயார்


ஆனால் மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ''கடனை திரும்ப செலுத்துவதாக மல்லையா ஒவ்வொரு முறையும் கூறுகிறார். ஆனால் அதன்படி அவர் செயல்படவில்லை. எனவே இந்தியாவுக்கு வருவதற்கு முன் அவர் பணத்தை 'டிபாசிட்' செய்யட்டும் பார்க்கலாம்'' என்றார்.

இதையடுத்து விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.