ரஜினிகாந்த் இ.பாஸ் வாங்கினாரா.. ஆய்வு செய்கிறோம்.. சென்னை மாநகராட்சி


ரஜினிகாந்த் மாஸ்க் அணிந்து காரில் செல்லும் போட்டோ ஒன்று காலையில் வைரலானது. அவர் எங்கே போனார் என்று பலரும் கேட்டனர். அதற்கு விடை மாலையில் கிடைத்தது. போயஸ்கார்டன் பங்களாவில் பல மாதங்கள் தங்கியிருந்ததால் ஒரு மாற்றத்திற்காக கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் மகள், மருமகன், பேரனுடன் ஓய்வெடுக்க போயிருக்கிறார் ரஜினி. இதற்குத்தான் மாஸ்க் போட்டுக்கொண்டு காரில் போயிருக்கிறார்.


சென்னையில் இருந்து ரஜினிகாந்த் செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்திற்கு முறையான அனுமதி பெற்று சென்றாரா? என்பது குறித்தும், சென்னைக்கு மீண்டும் முறையான பாஸ் பெற்று வந்தாரா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் கோ. பிரகாஷ் கூறியுள்ளார்.