முன்னாள் நாவலர் நெடுஞ்செழியனுக்கு வெண்கலச் சிலை


மறைந்த முன்னாள் நாவலர் நெடுஞ்செழியனுக்கு வெண்கலச் சிலை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதனால், சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் நெடுஞ்செழியனுக்கு சிலை நிறுவப்படுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளனர்.


இரா. நெடுஞ்செழியன் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கனாபுரத்தில்,  1920ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி பிறந்தார். இவர் மனைவி பெயர் மருத்துவர் விசாலாட்சி. இவர்களுக்கு மதிவாணன் என்னும் மகன் உள்ளார். இரா. நெடுஞ்செழியன் தமிழக அரசியல்வாதியும் இலக்கியவாதியும் ஆவார்.


இவர் தமிழகத்தின் நிதி அமைச்சராகவும், சிறிது காலம் மாற்று முதலமைச்சராகவும் பதவி வகித்தவர். மேலும், இவர் 'நாவலர்' என்னும் சிறப்பு பெயரால் அழைக்கப்பட்டா


அதிமுகவில் இணைந்த இவர் இறுதிவரை அக்கட்சியின் அவைத்தலைவராக இருந்தார். அதன்பின் இவர் 2000ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி காலமானார்.


நெடுஞ்செழியனின் பிறந்த நாளான ஜூலை 11ம் தேதியை அரசு விழாவாக கொண்டாட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.


மேலும், நெடுஞ்செழியனின் 'வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும்' என்ற தன் வரலாற்று நூலை அரசுடைமையாக்கவும் முடிவு செய்துள்ளார்.

i