கரோனாவிலிருந்து மீண்ட பிரபல தமிழ் நடிகரின் மகள்


 


பிரபல தமிழ் நடிகரின் மகள் கரோனா பாதிப்பில் இருந்து மீண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல கோலிவுட் நடிகர் அர்ஜுன்.


இவர் ரசிகர்களால் அன்புடன் ‘ஆக்ஷன் கிங்’ என்று அழைக்கப்படுபவர். இவரது மகளும் நடிகையுமான ஐஸ்வர்யாவிற்கு கடந்த திங்களன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட்டது.


இதையடுத்து ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் அவருக்கு ஆறுதலும், பிரார்த்தனைகளும் தெரிவித்தனர்.


இந்நிலையில் ஐஸ்வர்யா கரோனா பாதிப்பில் இருந்து மீண்டிருப்பதாக செவ்வாயன்று தகவல் வெளியாகியுள்ளது.


கடவுளின் கருணையினால் எனக்கு கரோனா பரிசோதனையில் முடிவு நெகட்டிவ் என்று வந்திருக்கிறது. எனக்காக பிரார்த்தித்தவர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.


இந்த பெருந்தொற்று இன்னும் முடியவில்லை. எனவே அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். ஆரோக்கியமாக இருங்கள். அனைவருக்கும் எனது அன்பு! இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.