ஞாயிறுதானே லாக்டவுன் சனிக்கிழமைஆட்டுக்கறி,  கோழிக்கறி - விசிலடிக்கும் குக்கர்கள்


ஞாயிறுதானே லாக்டவுன் நாங்க சனிக்கிழமையே கறி வாங்கிட்டோம்ல - விசிலடிக்கும் குக்கர்கள்


நூற்றுக்கு தொன்னூறு சதவீத மக்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவர்களுக்கு பிடித்தமான இறைச்சியை வாங்கி சாப்பிடுவார்கள். எல்லாமே கொரோனா லாக்டவுனுக்கு முன்புதான்.


மதுரையில் எந்த மட்டன், சிக்கன், மீன் கடைகளும் திறக்கவில்லை காரணம் லாக்டவுன் முழு கட்டுப்பாட்டுடன் அமல்படுத்தப்படுகிறது.


அதே நேரத்தில் பிற மாவட்டங்களில் தளர்வுகளுடன் லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் சனிக்கிழமையன்றே மட்டன் சிக்கன் மற்றும் மீன் கடைகளில் இறைச்சி விற்பனை படு ஜோராக நடைபெற்றது.


ஞாயிறு லீவு நாளைக்கே லீவு விட்டாலும் கவலையில்லை சனிக்கிழமையன்றே நாங்க ஸ்டாக் வாங்கி வைத்துக்கொள்வோம் என்கின்றனர் பொதுமக்கள்.


பொருளாதார நிலைமை டல்லடித்துப்போய்தான் இருக்கிறது என்றாலும் மனசுக்கு பிடித்த மாதிரி மட்டன் சிக்கன் என்று வாங்கி சாப்பிட்டு தெம்பாக இருப்போமே என்று மக்கள் நினைக்க ஆரம்பித்து விட்டனர்.


மக்களின் பொருளாதார நிலைக்கு ஏற்ப ஆட்டுக்கறி,  கோழிக்கறி, மீன் என இறைச்சி வகைகள் கடைகளில் வாங்கிச் சென்று வீட்டில் சமைத்து குடும்பத்தோடு சாப்பிட்டு சந்தோஷமாக பொழுதை கழித்து வந்தனர்


இன்றைய தினம் முழு லாக்டவுன் என்பதால் அனைத்து கடைகளும் மூடப்பட்டு விடும் என்று நினைத்து அட்வான்ஸ் ஆகவே சனிக்கிழமை மாலை முதல் இறைச்சி கடைகளில் கூட்டம் கூட ஆரம்பித்து விட்டது. சில கடைகளில் விடிய விடியவும் ஒரு சில கடைகள் விடியற்காலை இரண்டு மணி முதல் காலை 6 மணி வரையும் கறி விற்பனை செய்தனர்


-------------------------


 


பெட்ரோல், டீசல் விலை அப்டேட் - டீசல் விலை 1 லிட்டர் ரூ. 78 ஆக உயர்வு


----------------------


மதுரையில் ரூ. 10 க்கு உணவு வழங்கி வந்த ராமு தாத்தா காலமானார்...மக்கள் சோகம்!!


--------------------------
 சபாஷ் பூல்பாண்டியன்.. வீடு வீடாக யாசகம் பெற்ற ரூ.50,000 பணத்தை கொரோனா நிவாரணத்திற்கு வழங்கி அசத்தல்