பல்கலைக்கழக பருவத் தேர்வுகள் கட்டாயம்

 கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. இதையடுத்து, பல்வேறு மாநிலங்களும் பள்ளி தேர்வுகளை ரத்து செய்துள்ளன.  கல்லூரிகளை பொறுத்தவரை, கடந்த மார்ச் மாதம் நடக்க இருந்த பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டன. இருப்பினும், இந்த பருவத்தில் நடத்தப்பட வேண்டிய கல்லூரி, பல்கலைக்கழக பருவத் தேர்வுகள் கட்டாயம் நடத்த  வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.கர்நாடகாவில் கொரோனா சிகிச்சை மையங்களில் பன்றிகள், நாய்கள் சுற்றித்திரியும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கர்நாடக மாநிலம் கல்புர்கி மாவட்ட அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இந்த நிலையில் நேற்று காலையில் கல்புர்கி மருத்துவமனையில் பன்றிகள் கூட்டமாக உலாவும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பன்றிகள் சுற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதை அடுத்து, கல்புர்கி அரசு மருத்துவமனைக்கு சென்ற மாவட்ட ஆட்சியர், பன்றிகளை விரட்ட நடவடிக்கை மேற்கொண்டார்.