செய்திகள் - நீட் தேர்வு


CBSE  பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு:


நாடு முழுவதும் CBSE  10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.  இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அடுத்த 48 மணி நேரத்தில் மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிப்பு:


அரசுப்பள்ளி மாணவர்களுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 13ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டதால், நீட் பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் மாதம் வரை நீட்டித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.வரும் ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கம் கிடையாது:


புதுச்சேரியில் வரும் ஞாயிற்றுக்கிழமை கடைசி முகூர்த்த நாள் என்பதால் பொதுமுடக்கம் கிடையாது என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.பிரதமர் மோடி திறந்து வைத்தார்:


மத்தியப்பிரதேச மாநிலம் ரேவாவில் அமைக்கப்பட்டுள்ள ரூ.750 மெகா வாட் திறன் கொண்ட ஆசியாவிலேயே மிகப்பெரிய சூரிய மின்சக்தி பூங்கா திட்டத்தை பிரதமர் மோடி இன்று காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.வருகின்ற 14ஆம் தேதி:


அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக பாடம் நடத்தும் திட்டத்தை வருகின்ற 14ஆம் தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவங்கி வைக்க உள்ளார். 
புதிய மருத்துவக் கல்லூரி:


நீலகிரி மாவட்டத்தில் ரூ.447 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் புதிய மருத்துவக் கல்லூரிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.பொறியியல் நுழைவுத்தேர்வு ரத்து:


வேலூர் விஐடி பல்கலைக்கழக பொறியியல் படிப்பிற்கான நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.கனமழைக்கு வாய்ப்பு:


திருவள்;ர், மதுரை, சேலம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.போக்குவரத்தில் மாற்றம்:


சென்னை பூக்கடை போக்குவரத்து உட்கோட்டத்தில் சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் முன்பாக சுரங்கப்பாதை கட்டுமானப் பணி நடப்பதால் நாளை முதல் 15 நாட்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விளையாட்டுச் செய்திகள்:   இங்கிலாந்து அணி அறிவிப்பு:


அயர்லாந்து தொடருக்கான பயிற்சி முகாமிற்கான 24 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் இடம் கிடைக்காத பேர்ஸ்டோவ், மொயீன் அலி ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது. 


 


அதிநவீன குவைசவ்-11 ராக்கெட் தோல்வி:


சீனா ஏவிய அதிநவீன குவைசவ்-11 என்ற ராக்கெட் தோல்வி அடைந்துள்ளது. சீனா ராக்கெட் விண்ணில் வெடித்து சிதறியதற்கான காரணம் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.