இலவச அரிசி-அமைச்சர் காமராஜ்


நவம்பர் மாதம் வரை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கப்படும் என்று உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.


ஜூலை 1 முதல் 3 வரை பணம் கொடுத்து பொருள் பெற்றவர்களுக்கு அடுத்த மாதம் ஈடு செய்யப்படும் என்றும் ஏப்ரல், மே, ஜூன்,  ஜூலை மாதங்களில் வழங்கப்பட்ட அரிசி அளவின் படி நவம்பர் வரை வழங்கப்படும் என்றும் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.


.


விபத்து ஏற்படுத்தியதாக கடந்த 30-ம் போலீஸ் விசாரணையின் போது சாலையிலேயே ஓட்டுநர் தீக்குளித்தார்


நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தீக்குளித்த லாரி ஓட்டுநர் தியாகராஜா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.மதுரை மாவட்டத்தில் கொரோனா தடுப்புப்பணிகள் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதனையடுத்து மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது; கொரோனா நோயாளிகளை ஒதுக்கக் கூடாது. பாதிப்பு பகுதிகளில் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மதுரையில் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த பின் சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி அளித்தார்.கொரோனா வைரஸ் தொற்று மக்களை உடலளவில் மட்டுமின்றி மனதளவிலும் முடக்கி போட்டுள்ளது. இயற்கை அழகை ரசிக்கவும், உற்சாக பயணமாகவும், இயந்திரமயமான வாழ்க்கை முறைகளில் இருந்து இளைப்பாறும் விதமாகவும் மக்கள் சுற்றுலாவை தேர்வு செய்வது வாடிக்கை.


குமரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்களுக்கு கேரளாவில் இருந்தும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் வருகை தருகின்ற சுற்றுலா பயணிகள் வரத்து முற்றிலும் நின்றுவிட்டதால் அவர்களால் வியாபாரம் நடைபெறுகின்ற சாலையோர உணவுக்கடைகள், பழக்கடைகள் எல்லாம் வியாபாரம் குறைந்துள்ளது.