ஆம்லெட் புளிக்குழம்பு

ஆம்லெட் புளிக்குழம்பு:



தோசை, சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட இந்த ஆம்லெட் புளிக்குழம்பு அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :


முட்டை - 4
எண்ணெய் - தேவையான அளவு
வெங்காயம் - 2
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
புளி - எலுமிச்சை காய் அளவு
மஞ்சத்தூள் - அரை ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
கொத்த மல்லித்தூள் - அரை ஸ்பூன்
சோம்பு - அரை ஸ்பூன்
தேங்காய் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு


அரைக்க வேண்டிய பொருட்கள்:


காய்ந்த மிளகாய் - 2
மிளகு - அரை ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்


தனியாக அரைத்து வைக்கவும்.


சோம்பு + தேங்காய்


தாளிக்க வேண்டிய பொருட்கள்:


கடுகு -  1/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/4டீஸ்பூன்
வெந்தயம் - 1/4டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து


ஆம்லெட் புளிக்குழம்பு செய்முறை:


வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.


பின்பு அரைக்க கொடுத்துள்ள மிளகாய், சீரகம், மிளகு இவற்றை நைசாக அரைத்துக் கொள்ளவும்.


பின்பு புளியை ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும்.


பின்பு சோம்பையும், தேங்காவையும் சேர்த்து தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.


பின்பு முட்டை, உப்பு, மற்றும் அரைத்து வைத்துள்ள (மிளகாய், சீரகம், மிளகு) பொடியைப் போட்டு நன்கு அடித்து வைத்துக் கொள்ளவும்.


தோசைக் கல்லில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கி சிவந்ததும், அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி நன்கு வெந்ததும் திருப்பிப் போட்டு ஆம்லெட் செய்து கொள்ளவும்.


பின்பு ஆம்லெட்டை நான்கு அல்லது ஆறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.


ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாயை போட்டு நன்றாக வதக்கவும்.


வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.


தக்காளி குழைய வதக்கியதும் புளிச் சாரையுடன், மஞ்சத்தூள், மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு சேர்த்து அதில் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும்.


மசாலா பச்சை வாசனை  போனவுடன் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது (தேங்காய் + சோம்பு ) சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விட்டு இறக்கவும்.


இறக்கும் பொழுது வெட்டி வைத்த ஆம்லெட் துண்டுகளைப் போட்டு இறக்கவும்.



சுவையான முட்டை ஆம்லெட் புளிக்குழம்பு ரெடி


மோகனா  செல்வராஜ்