அதிமுக முன்னாள் எம்எல்ஏ மறைவு


கொரோனா பாதிப்பு..? அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், விஜயகாந்தின் சிறுவயது நண்பரான சுந்தர்ராஜன் உயிரிழப்பு..!


தேமுதிகவை உருவாக்கிய பங்கு, விஜயகாந்த்தின் சிறுவயது நண்பரான சுந்தர்ராஜனுக்கும் உண்டு.  2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் போட்டியிட்டு மதுரை மத்திய தொகுதியில் எம்.எல்.ஏ.வானார் சுந்தர்ராஜன். சட்டப்பேரவையில் ஜெயலலிதாவுக்கும் எதிர்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த்துக்கும் நடந்த வாக்குவாதத்துக்குப் பிறகு தேமுதிக எம்.எல்.ஏ-க்கள் ஜெயலலிதாவைச் சந்தித்தனர். அதன்பிறகு அதிமுகவில் அவர்கள் ஐக்கியமானார்கள். அதில் ஒருவர் சுந்தர்ராஜன்


மதுரையின் முன்னாள் எம்.எல்.ஏவான சுந்தர்ராஜன் அதிமுகவிலேயே இருந்து வந்தார். வயது மூப்பு காரணமாக தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கியே இருந்தார்.


மதுரை மத்திய தொகுதி முன்னாள் எம்எல்ஏவும், விஜயகாந்தின் நெருங்கிய நண்பரான சுந்தர்ராஜன் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் கத்திப்பாரா ஜனார்த்தனனின் மறைவுக்கு துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தமாகா கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் கத்திப்பாரா ஜனார்த்தனன் அவர்கள் மாரடைப்பு காரணமாக காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தேன்.