தமிழகத்தில் செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணை வெளியீடு
தமிழகத்தில் செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள விவரம் வருமாறு:
*சென்ற பருவத்தில் மாணவர்கள் பெற்ற தேர்வு மதிப்பெண்ணில் 30 % கணக்கில் எடுத்து கொள்ளப்படும்
*நடப்பு பருவத்தில் அக மதிப்பீட்டிலிருந்து 70 % மதிப்பெண் கணக்கில் எடுத்து கொள்ளப்படும் *இவற்றை வைத்து முதன்மை, மொழி பாடங்களுக்கு மதிப்பெண் அளிக்கப்படும்.
*செயல்முறை தேர்வு நடத்தப்படாமல் இருந்தால் ஆய்வக பதிவேட்டின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும்
*முந்தைய பருவத்தில் தேர்ச்சி பெறாமல் இருந்தால் தேர்வுகளை பின்னர் எழுத வேண்டும் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை தியாகராய நகரில் ஆயுதப்படை எஸ்.ஐ. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
விஷ்வ இந்து பரிஷத் அலுவலக பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு எஸ்.ஐ. சேகர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
சென்னை தி.நகரில் பாதுகாப்புப்பணியில் இருந்த ஆயுதப்படை எஸ்.ஐ. ஒருவர் வங்கிக்கடன் தொல்லையால் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
சென்னை மதுரவாயலில் எம்.எம்.டி.ஏ காலனியில் வசித்தவர் சேகர்(47). சென்னை ஆயுதப்படை எஸ்.ஐ.ஆக பணியில் இருந்தார். சென்னை தி.நகர் விஸ்வ இந்து பரிஷத் அலுவலகத்தில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வந்தார். அதே அலுவலகத்தில் பணியிலிருந்த அவர் திடீரென தனக்கு வழங்கப்பட்ட துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்டார்
கடன் தொல்லையால் தற்கொலை என தகவல்.
மாநிலங்களுக்கு ரூ.1,65,302 கோடி ஜிஎஸ்டி இழப்பீட்டை வழங்கியது மத்திய அரசு
தமிழகத்துக்கு மட்டும் ரூ. 12,305 கோடி விடுவிப்பு
2019-2020 நிதி ஆண்டுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை வழங்குவதாக மத்திய அரசு அறிவிப்பு
உயர் திறன் கொண்ட கொரோனா பரிசோதனை மையங்களை பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார்
நொய்டா, மும்பை, கொல்கத்தா ஆகிய மூன்று இடங்களில் உயர் திறன் பரிசோதனை மையங்கள் அமைப்பு
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், உ.பி. முதலமைச்சர்கள் பங்கேற்பு