திருக்குறள் குறித்து- பிரதமர் மோடிபேச்சு

 புதுடில்லி : 'திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நுாலாகும்; உயரிய சிந்தனைகள், உன்னத குறிக்கோள்கள், ஊக்கம் தரும் கருத்துகளை உள்ளடக்கிய பொக்கிஷம்' என, பிரதமர் மோடி, 'டுவிட்டரில்' தமிழில் பதிவிட்டுள்ளார்.


அதே கருத்தை ஆங்கிலத்திலும் பதிவிட்டுள்ளார். டுவிட்டரில், பிரதமர் கூறி உள்ளதாவது: திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நுாலாகும். உயரிய சிந்தனைகள், உன்னதக் குறிக்கோள்கள், ஊக்கம் தரும் கருத்துக்களை உள்ளடக்கிய பொக்கிஷமாகும். தெய்வப்புலவர் திருவள்ளுவரின் எழுத்துக்கள், நம்பிக்கையும், ஒளியும் பரப்பும் வல்லமை வாய்ந்தவை. இந்தியா முழுதிலுமுள்ள இளைஞர்கள் பலரும், திருக்குறளை படித்துப் பயனுருவர் என, நம்புகிறேன்.


திருக்குறள் குறித்த பிரதமர் மோடியின் கருத்துக்கு முதலமைச்சர் நன்றி


* தமிழுக்கும், தமிழருக்கும் பெருமை சேர்த்துவிட்டதாக முதலமைச்சர் பாராட்டு


* இனம்,மொழி, நாடு கடந்து அனைத்து தரப்பு மக்களையும் நெறிப்படுத்தும் நூல் திருக்குறள் - முதலமைச்சர்சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், வாழ்வாதாரம் இழந்துள்ள தங்களை சொந்த ஊர்களுக்கு செல்ல அனுமதிக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.


இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நிதி மன்றம் தமிழகஅரசு ஒரு வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வேகமாக மீண்டு வருகிறார்கள். ஒரே நாளில் 5,000 பேர் மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார்கள்.


அதே நேரத்தில் தமிழகத்தில் தொடர்ந்து 4000-க்கு மேல் புதிய கொரோனா தொற்றுகள் தினமும் பதிவாகி வருகிறது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 1.5 லட்சத்தைக் கடந்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து கட்டுக்குள் நீடிக்கும் சமயத்தில், மதுரை, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.