மதுரை நீதிபதி பி.என்.பிரகாஷ் மாற்றம்... ஏன்?

சாத்தான்குளம் வழக்கு: மதுரை நீதிபதி பி.என்.பிரகாஷ் மாற்றம்... ஏன்?


சாத்தான்குளம் சம்பவத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இன்று திடீரென்று அந்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி மாற்றப்பட்டுள்ளார்.


தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மகன் இருவரும் காவலர்களால் சித்ரவதை மரணம் செய்யப்பட்ட விவகாரத்தில் தானாக முன்வந்து விசாரித்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. இந்த விவகாரத்தில் நீதி கிடைக்குமா என்ற சந்தேகத்தில் இருந்த மக்களுக்கு, நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையூட்டும் விதத்தில் அமைந்தது இந்த நடவடிக்கை.


அதோடு நில்லாமல், தொடர்ந்து அரசும் பதிலளிக்க ஆணையிட்டதையடுத்து வழக்கு சிபிஐ, சிபிசிஐடி என்று மாற்றப்பட்டுத் தற்போது 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு கொலை வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது.


இந்த விவகாரத்தில் நீதியை நோக்கிய பாதையில் இந்த வழக்கு பயணிக்கக் காரணம் என்றால், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வு நீதிபதிகள் புகழேந்தி, பிரகாஷ், நேரடி விசாரணை செய்து அழுத்தமான அறிக்கை சமர்ப்பித்த நீதிபதி பாரதிதாசன், அதில் சாட்சி சொன்ன பெண் தலைமைக் காவலர் ரேவதி ஆகியோரின் பெயர்களைச் சொல்லலாம்.


இவர்களுக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் வந்ததைப் போலவே, முறையான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்து வந்தன. இந்நிலையில், இன்று நீதிபதி பிரகாஷ் மதுரைக் கிளை நீதிமன்றத்திலிருந்து மாற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.


சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதிகள் தமிழ்நாட்டில் உயர்நீதிமன்ற பிரிவு என்ற அடிப்படையில் மதுரையில் பணியாற்ற கடமைப்பட்டுள்ளார்கள்.


அதில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வழக்கமான நடைமுறையில் மாற்றப்படுவதுதான், அப்படி மாற்றப்பட்டவர்தான் நீதிபதி பிரகாஷ். தற்போது அவருக்கான சுற்றுக்காலம் முடிவடைந்து உள்ளது. இந்த இடத்துக்கு நீதிபதி சத்யநாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.


சாத்தான்குளம் கொலை வழக்கின் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. வழக்கை தாமாக முன்வந்து எடுத்தவர் என்ற பின்னணியில் இவரது மாற்றம் இந்த வழக்கின் போக்கில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்றும் கேள்விகள் எழுந்துள்ளன..சாத்தான்குளம் மரணத்தை தாமாக விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதிமன்ற நீதிபதி பிரகாஷ்கு பதிலாக நீதிபதி சத்யநாராயணன் நியமனம்-செய்தி!


உடுமலை சங்கர்  வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கின் முதல் குற்றவாளியான கௌசல்யாவின் தந்தையை விடுதலை செய்து தீர்ப்பளித்தனர். மேலும் இந்த வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்த 5 பேரின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.


அடுத்து என்னபா,உடுமலை சங்கர் வழக்குல கூலி படைக்கு மட்டும் தண்டனை தந்தாமாதிரி,ஆசனவாய்குள்ள போன லட்டிகளுக்கு தண்டனை தந்துட்டு மத்தவங்கள ரிலீஸ் பண்ண போறீக, அதான சமூக வலைதளங்களில் ​​எழுந்துள்ளன.


நடைமுறைப்படி இது சரிதான் என்றாலும், இதுபோன்ற சிறப்பு வழக்குகளின்போது நீதி கிடைப்பதை உறுதி செய்ய இவர் இருக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் சமூக வலைதளங்களில் ​​எழுந்துள்ளன.