கொரோனா பலி எண்ணிக்கை


சென்னையில் கொரோனாவால் நேற்றிரவு முதல் காலை வரை 26 பேர் உயிரிழந்துள்ளனர்.


சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 6 பேரும், ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 5 பேரும், கே.எம்.சி மருத்துவமனையில் 5 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 6 பேரும் உயிரிழந்துள்ளனர். சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 4 பேர் உயிரிழந்துள்ளனர்.


நெல்லையில் இன்று மேலும் 99 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.


மதுரையில் இன்று மேலும் 312 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுவரை மதுரையில் 77 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 6,24,720 வாகனங்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 8,23,488 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 7,50,620  வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் ரூ. 17,37,57,276 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.திருச்சியில் 14 வயது சிறுமி உயிரிழப்பு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று திருச்சி சரக டி.ஐ.ஜி.ஆனி விஜயா தகவல் தெரிவித்துள்ளார். சிறுமியின் தலையில் காயம் இருப்பதாக வந்த தகவல் உண்மையில்லை என டி.ஐ.ஜி. மறுப்பு தெரிவித்துள்ளார்.