சென்னை கணிதவியல் நிறுவனத்தை உருவாக்கியவரான சி.எஸ் சேஷாத்தரி (88) வயது மூப்பு காரணமாக காலமானார். காஞ்சீவரம் ஸ்ரீரங்காச்சாரி சேஷாத்திரி என பெயரை கொண்டசி.எஸ் சேஷாத்தரி இயற் கணிதவியலில் புலமை பெற்றிருந்தார். இப்பிரிவில் இவர் வகுத்த கோட்பாடு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
1932 ம் ஆண்டு பிப்.,29 ல் பிறந்த சேஷாத்திரி 1953 ம் ஆண்டுமெட்ராஸ் யுனிவர்சிட்டியில் கணிதவியலில் பி.ஏ.(ஹானர்ஸ்)பட்டம் பெற்றார். தொடர்ந்து 1958 ம் ஆண்டு பாம்பே யுனிவர்சிட்டியில் பி.எச்.டி., முடித்தார்.
1971 ம் ஆண்டு இந்திய அறிவியல் அகாடமியின் பெல்லோவாக தேர்வு செய்யப்பட்டார். 1953 முதல் 1984 வரையில் மும்பையில் உ்ளள டாடா இன்ஸ்டிடியூட் ஆப் ஃபண்டமெண்டல் ரிசர்ச்சில்(டிஐஎப்ஆர்) கணித பேராசிரியராக பணியாற்றினார். தொடர்ந்து சென்னை ஐஎம்எஸ்சியிலும் பணியாற்றி உள்ளார்.
இவரின் கணித திறைமையை பாராட்டி அமெரிக்கா மேதமெடிக்கல் சொசைட்டி பாரீசின் யுனிவர்சிட்டி ஆப் பியரி மற்றும் பத்மபூஷன், ஷாந்தி ஸ்வரூப் பத்நாகர் விருது. இந்திய அறிவியல் அகாடமி சார்பில் ஸ்ரீனிவாசா ராமானுஜம் விருது , பனாரஸ்இந்து பல்கலை சார்பில் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
தமிழக கணித மேதை சி.எஸ்.சேஷாத்ரி (17ம்தேதி) மறைவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்துள்ளார். சென்னை கணிதவியல் கழகத்தின் நிறுவனர் மற்றும் ஆய்வு பெற்ற இயக்குனர் சி.எஸ். சேஷாத்ரி மறைவு வேதனை தருகிறது என கூறினார்.
பிரபல கணிதமேதை சிஎஸ் சேஷாத்திரி (17ம்தேதி) காலமானார். அவரின் மறைவுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த கணித மேதை சி.எஸ். சேஷாத்ரி (88) மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள டுவிட்டரில் இயற்கணித துறையில் அவரின் ஈடு இணையற்ற பங்களிப்பிற்காக எப்போதும் நினைவுகூரப்படுவார். என பதிவிட்டுள்ளார்.