உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ்-குடும்பத்திற்கு அரசு பணி


சாத்தான்குளம்  சிறையில் அடைக்கப்பட்ட தந்தை-மகன் திடீரென இறந்த சம்பவம் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.


உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா பத்து லட்சம் ரூபாயும், குடும்பத்தில் ஒருவருக்கு விதிமுறைகளுக்குட்பட்டு தகுதிக்கேற்ப அரசு வேலையும் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். 


இந்நிலையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு அரசுப் பணிக்கான பணிநியமன ஆணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார்.


சென்னை தலைமை செயலகத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு அரசு பணிக்கான பணிநியமன ஆணையை இன்று வழங்க உள்ளார்.சென்னை விமான நிலையத்தில் தூய்மை பணி, பராமரிப்பு பணிகளில் தனியார்  ஒப்பந்த ஊழியர்கள் உட்பட சுமார் 400 பேர் பணியாற்றுகின்றனர்.


கடந்த 4 மாதங்களாக கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு ஊரடங்கால் பஸ், மின்சார ரயில், ஷேர் ஆட்டோ போன்ற பொது போக்குவரத்து இல்லை. இதனால் இவர்கள் பணிக்கு வந்து செல்வதில் பெரும் சிரமங்கள் ஏற்பட்டன.


இதனால் தற்போது சென்னை விமான நிலைய ஒப்பந்த ஊழியர்கள் பலர் சைக்கிளை பயன்படுத்த தொடங்கி விட்டனர்.


லைசென்ஸ், இ-பாஸ் தொல்லையில்லை விமான நிலைய ஊழியர்களுக்கு கைகொடுக்கும் சைக்கிள்: 


டிரைவிங் லைசென்ஸ், ஹெல்மெட், இ-பாஸ், எரிபொருள் செலவு  தேவையில்லை. ஆர்சி புக், இன்சூரன்ஸ் போன்ற ஆவணங்களும் தேவையில்லை. போலீஸ் வாகன சோதனைக்கு பயப்பட வேண்டியதில்லை. யாருடைய தயவையும் எதிர்பார்க்க வேண்டியதில்லை.எங்களுக்கு ஒருவிதத்தில் உடற்பயிற்சியாகவும் இருக்கிறது.


ஊரடங்கு முழுமையாக நீங்கி பொது போக்குவரத்து மீண்டும் தொடங்கும் வரை எங்களுடைய  சைக்கிள் பயணம் தொடரும் என்றனர்.