நடிகை ரோஜா செயலால் சர்ச்சை


ஆந்திராவில் தனது தொகுதிக்குட்பட்ட பகுதியில் புதிதாக ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைத்த நடிகையும் எம்.எல்.ஏ.வுமான ரோஜா, புதிய ஆம்புலன்சை சிறிது தூரம் ஓட்டிச்சென்றார்.


ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அவசர காலத்திற்காக 108 என்ற எண் கொண்ட புதிய ஆம்புலன்ஸ் வாகனங்கள் தொகுதி மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.


இதில் நகரி தொகுதி ஓய்.எஸ்.ஆர்., காங்., கட்சி எம்.எல்.ஏ.வும், நடிகையுமான ரோஜா, கலந்து கொண்டு தேங்காய் உடைத்து பூஜை செய்து புதிய ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைத்தார். அப்போது ஆம்புலன்சை தானே சிறிது தூரம் ஓட்டிச்சென்றார்.


நடிகை ரோஜாவின் இது போன்ற செயலால் பொது பயன்பாட்டிற்காக ஒப்படைக்க நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ்கள் பல மணி நேரம் காத்திருந்தன. ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டதாக புகார் எழுந்தது.தமிழகம் முழுதும் உள்ள, வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் முன், சத்துணவு ஊழியர்கள், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


ஊரடங்கு காலத்தில், பணியாற்றி வரும் சத்துணவு ஊழியர்களுக்கு, சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை, 60 ஆக உயர்த்த வேண்டும்.


இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுதும் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் முன், சத்துணவு ஊழியர்கள், நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதை, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் நடத்தியது.