எப்போது பள்ளிகளை திறக்கலாம்

 



ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் எப்போது பள்ளிகளை திறக்கலாம்? என பெற்றோர்கள் கருத்து தெரிவிக்க மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. எனவே வரும் 20-ம்  தேதிக்குள் கருத்து தெரிவிக்க மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. மின்னஞ்சலில் ஆலோசனை சொல்ல மனித வள மேம்பாட்டுத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளார்.



 வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


நீலகிரி, கோவை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.


மதுரை, திருச்சி, கரூர், அரியலூர் ஆகிய உள்மாவட்டங்களிலும், வட தமிழகத்திலும் மழை பெய்ய வாய்பு உள்ளதாக அறிவித்துள்ளது.


 



சென்னையில் 84,598 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், 14,997 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.


மேலும் சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கொரோனா பாதிப்பால் 1407 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தகவல் தெரிவித்துள்ளது.


செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 237 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,597 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 6,845 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் எனவும், 2,328 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.