பல்கலைக்கழக, கல்லுாரித் தேர்வுகளை ரத்து செய் ய-கோரிக்கை


மூளை ரத்த கசிவு காரணமாக மூத்த செய்தி ஆசிரியர் திரு. பாலக்குமார் காலமானார். சிகிச்சைக்காக சென்னை காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பாலக்குமார் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு சிகிச்சை பலனின்றி காலமானார். பாலக்குமார் மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள், ஊடக நண்பர்கள் என பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



கொரோனா பரவும் காலத்தில், பல்கலைக்கழக, கல்லுாரித் தேர்வுகளை, பல்கலை மானிய குழு நடத்துவது நியாயமற்றது. தேர்வுகளை ரத்து செய்து, மாணவர்களின் முந்தைய மதிப்பெண்களை வைத்து, அவர்களை தேர்ச்சி பெறச் செய்ய வேண்டும்.  - ராகுல், எம்.பி., காங்கிரஸ்



 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான இலவச புத்தகம் விநியோகம் செய்யும் வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது. மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து படிப்பதற்கு ஏற்ப புத்தகங்களை விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. புத்தகம் விநியோகம் செய்யும் போது 1 மணி நேரத்தில் 20 பேருக்கு மிகாமல் இருக்க வேண்டும். கட்டுப்பாட்டு பகுதியில் இருப்பவர்கள் தனிமை நாட்கள் முடிந்தவுடன் புத்தகம் பெற்றுக்கொள்ளலாம்.



பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.83.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.91-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.