சப்பாத்திக்கு பொருத்தமான பனீர் பட்டர் மசாலா - சூப்பராக செய்ய ரெசிபி
சப்பாத்திக்கு கிழங்கு, குருமா என செய்து போரடித்தது போதும். வட இந்திய சுவையில் பனீர் பட்டர் மசாலா செய்து கொடுங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள் :
வதக்கி அரைக்க
எண்ணெய் - 1 tbsp
ஏலக்காய் - 2
வெங்காயம் - 2
உப்பு - 1/4 tsp
சர்க்கரை - 1/2 tsp
முந்திரி - 10
காய்ந்த மிளகாய் பொடி - 1/2 tsp
கரம் மசாலா - 3/4 tsp
தனியா பொடி - 1 tsp
பனீர் பட்டர் மசாலா
பிரிஞ்சு இலை - 1
பட்டை - 1 இஞ்ச்
ஏலக்காய் - 2
கிராம்பு - 2
வெண்ணெய் - 3 tsp
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 tsp
மிளகாய் பொடி - 1/2 tsp
பனீர் - 250 கிராம்
கஸ்துரி மேத்தி - 1 tsp
மில்க் கிரீம் - 3 tsp
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை :
பனீரை சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள்.
வதக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை கடாயில் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். பின் சூடு தணிந்ததும் மிக்ஸியில் போட்டு மைய அரைத்துக்கொள்ளுங்கள். கொஞ்சம் தண்ணீர் ஊற்றி மீண்டும் அரையுங்கள். அதை தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.
தற்போது அதே கடாயில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் பட்டை, கிராம்பு சேருங்கள். பொறிந்ததும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேருங்கள்.
அடுத்ததாக அரைத்து வைத்துள்ள மசாலா கிரேவியை ஊற்றுங்கள். ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக்கொள்ளுங்கள். தற்போது மூடி கொதிக்க வையுங்கள்.
தண்ணீர் வற்று கெட்டிப்பதம் வந்ததும் பனீரை சேர்த்து பிரட்டுங்கள். அடுத்ததாக கிரீம், கஸ்துரி மேத்தி சேர்த்து கிளறுங்கள். இறுதியாக கொத்தமல்லி தூவி இறக்கிவிடுங்கள்.
அவ்வளவுதான் சுவையான பனீர் பட்டர் மசாலா தயார்
மோகனா செல்வராஜ்