செய்திகள் - ஆவின் 5 புதிய பால் பொருட்கள்

மாநிலச் செய்திகள்


ஜூலை 13ஆம் தேதிக்குப் பிறகு ஆன்லைன் வகுப்புகள்:


அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சிகள் மூலம் நடத்தப்படும் வகுப்புகளை ஜூலை 13ஆம் தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைப்பார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


3 மாதங்களுக்கு நீட்டிக்க ஒப்புதல்:


டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.5 புதிய பால் பொருட்களை தொடங்கி வைத்தார்-முதல்வர்:


ஆவின் நிறுவனத்தின் சார்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 5 புதிய பால் பொருட்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று துவக்கி வைத்தார்.


முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல்:


தமிழகத்தில் விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது என்று மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங்கிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.தமிழகம், புதுவையில் கனமழைக்கு வாய்ப்பு:


தமிழகம், புதுவையில் அடுத்த 48 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


மாவட்டச் செய்திகள்சிவகாசியில் செயல்படும் பட்டாசு ஆலைகள் நாளை முதல் வரும் 19ஆம் தேதி வரை மூடப்படுவதாக தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 


விளையாட்டுச் செய்திகள்


சவுத்தாம்ப்டன் நகரில் இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மழை பெய்வதால் தாமதம் ஏற்பட்டுள்ளது.