மத்தியப்பிரதேச ஆளுநர் காலமானார்-பிரதமர் மோடி இரங்கல்


மத்தியப்பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன்(85) உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் காலமானார்.  மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி லால்ஜி டாண்டன் காலமானதாக அவரது மகன் அசுதோஷ் அறிவித்துள்ளார்.


உடல்நலக்குறைவால் கடந்த ஜூன் மாதம் லால்ஜி டாண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் பாஜகவை வலிமைப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியவர் என்று மோடி கூறியுள்ளார். சமூக நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் லால்ஜி என்று அவர் தெரிவித்துள்ளார்