உங்கள் ராசிக்கு நான்காவது வீட்டில் சூரியன் மாறுகிறது, இது தாயார் மற்றும் வீடு, வசதிகள், சுக ஸ்தானத்தை குறிக்கிறது. எந்த ஒரு விஷயத்தையும் நீங்கள் விரைவாகத் தொடங்க விரும்புவீர்கள், இருப்பினும் சில சாதகமற்ற சூழலால் சற்று தாமதமாகலாம். இதன் காரணமாக, உங்கள் குடும்ப உறுப்பினர்களை மீது ஆக்ரோஷமும் விரக்தியும் செலுத்தக்கூடும். இது உங்கள் மன அமைதியையும் குடும்ப சூழ்நிலையையும் சீர்குலைக்கும்.
எல்லோரையும் அன்பால் அடக்கி ஆளும் திறன் கொண்ட மேஷராசி அன்பர்களே, உங்கள் ராசிநாதன் செவ்வாய், உங்கள் ராசிக்கு 12ல் இருப்பதால் எதிலும் விழிப்புணர்வுடன் இருங்கள். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. மருத்துவ செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. சிக்கனம் சேமிப்பை தரும் என்பதை உணரும் காலம். இருப்பினும் அனுபவத்தால் அனைத்தையும் உணர்ந்து கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். மாத முற்பகுதியில் பொருளாதார நிலையில் இருந்த முடக்கம் மாறி முன்னேற்றம் அதிகரிக்கும். உங்கள் இனிமையான பேச்சால் அனைவரையும் வசீகரிப்பீர்கள். எதிர்காலம் பற்றிய வீண் பயம் மனதில் குடிகொள்ளும். சுய சந்தேகத்தை தவிர்ப்பது நல்லது.
உடன் பிறப்புகளால் மனக் கசப்புகள் உண்டாகும். பயணங்களை தவிர்ப்பது நல்லது. தாய் மற்றும் உறவுகளால் அனுகூலம் உண்டு. வீட்டிற்கான வசதிகளை மேம்படுத்துவீர்கள். குழந்தைகள் உடல் நிலையில் கவனம் தேவை. குழந்தைகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பில் வைத்து அன்புடன் அரவணைத்து செல்வதால் தேவையற்ற வீண் பிரச்னைகளை தவிர்க்கலாம். குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வது நற்பலனைத் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்கள் பணிகளில் மற்றும் ஆவண விஷயங்களில் கவனமுடன் இருங்கள். கணவன் மனைவிக்குள் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும். மனைவி மற்றும் மனைவி வழி உறவுகளால் ஆதாயம் உண்டு. எதிர்பாராத அதிர்ஷ்டமும், தன வரவும் உண்டு.தந்தை உடல் ஆரோக்கியம் சீரடையும்.
உங்களுக்கு விருப்பமில்லாத சில பணிகள் உங்களுக்கு வழங்கப்படலாம், இது மூத்த அதிகாரிகளுடன் சில கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, உங்கள் பணியிடத்திற்குள் எந்த மோதல்களையும் தவிர்க்கவும். உங்கள் வேலையை நேர்மையுடன் செய்ய வருங்காலத்தில் உங்கள் மீதான மதிப்பு உயரும்.
இந்த காலகட்டத்தில், நிலம் மற்றும் சொத்து விஷயங்களும் தாமதமாகலாம், மேலும் பலனளிக்காது, எனவே அவற்றை இப்போதே எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. இது நிறைய நேரத்தையும் சக்தியையும் வீணடிக்க வழிவகுக்கும்.
சந்திராஷ்டம நாட்கள்: ஜூலை 29, 30, 31.
பரிகாரம்: வியாழக்கிழமைதோறும் ஸ்ரீ முருகப் பெருமானை பூஜியுங்கள்.
உங்கள் ராசிக்கு மூன்றாவது வீட்டில் அதாவது முயற்சிகள், தைரியம் மற்றும் இளைய சகோதரர் ஸ்தானத்தில் சூரியன் மாறுவதால் உங்கள் தைரியம் மற்றும் வீரம் அதிகரிப்பதைக் காண்பீர்கள். நீங்கள் மிகவும் கடின உழைப்பாளி மற்றும் விவேகத்தின் அடையாளம். சூரிய பெயர்ச்சியால் நீங்கள் விரும்பிய குறிக்கோள்களையும் லட்சியங்களையும் அடைவதற்கான முயற்சிகளில் சளைக்காமல் ஈடுபடுவீர்கள். உங்கள் பணியில் எப்போதும் முதலிடத்தில் இருப்பீர்கள்.
தன்னை சார்ந்தவர்களின் பாதுகாப்பில் அதிக அக்கறை கொள்ளும் ரிஷப ராசி அன்பர்களே, உங்கள் ராசிநாதன் சுக்கிர பகவான் உங்கள் ராசியில் சஞ்சரிப்பதால் எதிலும் மகிழ்ச்சியான சூழல் நிலவும். இதுவரை இருந்த குழப்ப நிலை நீங்கி மனம் அமைதி பெறும். ராஜ தந்திரத்தால் அனைத்தையும் சாதிக்கும் காலம் ஆகும். கோபத்தை தவிர்க்கவும். பேச்சில் தேன் தடவிய வார்த்தைகளை பயன்படுத்த தவறாதீர்கள். குடும்ப விஷயங்களில் சமாதான நிலையை கடைபிடிப்பதால் வீண் பிரச்னைகளை தவிர்க்கலாம். தேவைக்கேற்ப பொருளாதார நிலை இருக்கும். சகோதர, சகோதரிகளால் ஆதாயம் உண்டு. எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். மனோபலம் அதிகரிக்கும். தாய் உடல் நிலையில் கவனம் தேவை.
வீடு, வாகன செலவுகள் அதிகரிக்கும். குழந்தைகள் விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. எதிர்மறையான சிந்தனைகளை தவிர்த்து, நேர்மறை சிந்தனை மற்றும் வைராக்கியத்தை வளர்த்து கொள்ளுங்கள். குலதெய்வ வழிபாட்டால் நன்மை பெறலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு, உங்கள் திறமையை வெளிப்படுத்தும் காலம் ஆகும். கணவன் மனைவிக்குள் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும்.
தொழில் மற்றும் உத்தியோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளவேணாடாம்.அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்த்து, எதிலும் தீர ஆலோசித்து செயல்படுவது நல்லது. தந்தை உடல் நிலையில் கவனம் தேவை. செல்வம், ஆரோக்கியம் சிறக்கும். பயணங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டு. உங்கள் செயல்களில் கடமை உணர்வுடன் செயல்பட்டால் இந்த மாதம் மிகுந்த நற்பலனை பெறலாம்.
சந்திராஷ்டம நாட்கள்: ஜூலை 31. ஆகஸ்ட் 1, 2. பரிகாரம்: வௌ்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமியுடன் கூடிய ஸ்ரீமன்நாராயணரை தரிசித்து வருங்கள்.
உங்கள் ராசிக்கு இரண்டாம் இடமான குடும்பம், தன ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிக்க உள்ளார். சில நேரங்களில் நீங்கள் கடுமையான பேச்சை உபயோகிக்க நேரிடும். பொன், பொருளைவிட புத்தி சாதுர்யம் சிறந்தது என்ற சிந்தனை உடைய மிதுன ராசி அன்பர்களே, உங்கள் ராசிநாதன் புதன் பகவான் உங்கள் ராசியிலே சஞ்சரிப்பதால், இதுவரை இருந்த குழப்பநிலை, தடைகள் விலகும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு எளிதாக தீர்வு காண்பீர்கள். மனதில் ஒரு தெளிவு ஏற்படும். உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள், முன்னேற்றங்கள் ஏற்படும். எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பொருளாதார நிலை மேம்படும். உங்கள் பேச்சிற்கு மதிப்பு, மரியாதை உயரும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். சகோதர, சகோதரிகளால் நன்மை உண்டாகும். தாய் உடல் நிலை ஆரோக்கியம் அடையும். தாய் மற்றும் உறவுகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
இது உங்கள் குடும்ப வாழ்க்கையில் தேவையற்ற சிக்கல்களையும் தொந்தரவுகளையும் உருவாக்கும். சூரியன் ஒரு வறண்ட கிரகம் அது சேமிப்பு இல்லத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதால், இந்த காலகட்டத்தில் தன வரவில் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்.
உணவு விஷயத்தில் மிக கவனமாக இருப்பது அவசியம். இது சில உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும், குறிப்பாக வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படலாம். மேலும் கண் தொடர்பான சிக்கல் இருக்கக்கூடும் என்பதையும் இது குறிக்கிறது,
உங்கள் திறமை உயரதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களால் பாராட்டப்படும். உயரதிகாரிகள் உங்களுக்கு சில சூட்சுமங்களை சொல்லி கொடுப்பார்கள். உங்கள் அந்தஸ்து, புகழ் உயரும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. அரசு காரியங்கள் சாதகமாக முடியும். வீட்டின் வசதி வாய்ப்புக்களை மேம்படுத்துவதற்கான செலவீனங்கள் அதிகரிக்கும்.
சந்திராஷ்டம நாட்கள்: ஆகஸ்ட் 2, 3, 4.
பரிகாரம்: சனிக்கிழமை தோறும் ஸ்ரீ ஆஞ்சநேயரை வழிபடுங்கள்.
கடக ராசிக்கு சொந்த வீட்டில் சூரிய பகவான் சஞ்சரிப்பதால் உயர்வுக்கு வழிவகுக்கும். இது உங்கள் தலைமை மற்றும் நிர்வாக குணங்களை மேம்படுத்துகிறது.
உங்கள் செயலை திட்டமிட்டு அணுகுவீர்கள். நிலுவையில் பணிகளை முடிக்க இது உங்களுக்கு உதவும். சூரியனின் இந்த பெயர்ச்சி உங்கள் அன்புக்குரியவர்களுக்குப் பாதுகாப்பாக அமையும். இருப்பினும், உங்கள் தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இது குடும்பச் சூழலை சீர்குலைக்கும்.
சனி பகவான் அமர்ந்திருக்கும் ஏழாம் வீட்டை சூரியன் நேரடியாக பார்ப்பதால், உங்கள் மனைவியுடன் சில ஈகோ மோதல்கள் இருக்கக்கூடும். இது உங்கள் உறவில் ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்தும். உங்கள் முடிவெடுப்பதில் தடுமாற்றம் ஏற்படும். எனவே, கொஞ்சம் பொறுமை இந்த மாதம் மிகவும் தேவை. தன்னுடைய இளகிய மனத்தால் அனைவரிடமும் கருணையுடனும், அன்புடனும் செயல்படும்
கடக ராசி அன்பர்களே, உங்கள் ராசிநாதன் சந்திர பகவான் உங்கள் ராசிக்கு 9ல் சஞ்சரிப்பதால் எதிலும் முன்னேற்றம் ஏற்படும். பொறுமையே பெருமை தேடி தரும். விடா முயற்சியும், கடின உழைப்பும் உங்கள் வாழ்வை உயர்த்தும் என்பதை உணரும் காலம்.
யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். எந்த விஷயத்திலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. குடும்ப விஷயத்தில் கவனம் தேவை. பொருளாதார நிலையில் ஏற்ற தாழ்வு ஏற்படும். வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் சிக்கனம் தேவை. சகோதர, சகோதரிகளால் சிறு மன ஸ்தாபங்கள் வந்து நீங்கும். அண்டை, அயலார் விஷயத்தில் கவனம் தேவை. நகை இரவல் வாங்க வேண்டாம். தாய் வழியில் அனுகூலம் உண்டு. தாய் மற்றும் உறவுகளால் ஆதாயம் உண்டு. வீடு மற்றும் வாகன வசதிகளை மேம்படுத்துவீர்கள். வீட்டிற்குத் தேவையான சாதனங்களை வாங்குவீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
வியாபாரத்தில் கூட்டாளிகளால் பிரச்னை வர வாய்ப்புள்ளதால் கூட்டாளிகளை கண்காணிப்பில் வைத்து கொள்வது நல்லது.தந்தை வழியில் அனுகூலம் உண்டு. திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் உண்டாகும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். உயரதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். எனினும் அதிக உரிமை எடுத்து கொள்ளவேண்டாம். பொறுமை அவசியம்.
சந்திராஷ்டம நாட்கள்: ஆகஸ்ட் 4, 5, 6.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை தோறும் சிம்ம வாகினியை வழிபடுங்கள்
நாளை சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் ராசி தொடரும்
மோகனா செல்வராஜ்