ராசிக்கு 12ம் வீடான விரய மோட்ச ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் வீட்டில் செலவுகள் மற்றும் வெளிநாட்டு பயணங்களில் ஏற்படக்கூடும். தன் சுய கௌரவமே பெரிதென எப்போதும் சிந்திக்கும் சிம்மராசி அன்பர்களே, உங்கள் ராசிநாதன் சூரிய பகவான் உங்கள் ராசிக்கு 12ல் சஞ்சரிப்பதால் எதிலும் கவனம் தேவை. யாரையும் முழுமையாக நம்பி ஜாமீன் போன்ற விஷயங்களில் ஈடுபட வேண்டாம்.
வயதானவர்களின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் தேவை. இந்த பெயர்ச்சி உங்கள் நம்பிக்கையை அசைத்து பார்க்க வழிவகுக்கும், உங்கள் சொந்த திறமையில் சந்தேகம் ஏற்படலாம், இது உங்கள் சுயமரியாதையை குறைக்கும். பணியிடத்தில் மனநிறைவையும் மகிழ்ச்சியையும் தேடுவது சங்கடத்தை தரும். சட்டத்திற்கு எதிரான விதிகளை மீறக்கூடிய செயலில் கண்டிப்பாக ஈடுபட வேண்டாம். இது சிக்கல்களை உருவாக்கும். தொழில் ரீதியாக, எந்தவொரு புதிய முடிவுகளையும் எடுப்பதற்கான சரியான காலம் இதுவல்ல.
மருத்துவ செலவுகள் உண்டாகும். உங்கள் ஆளுமை திறன் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பொருளாதார நிலையில் ஏற்றம் உண்டு. உங்கள் பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். உறவினர்களால் மகிழ்ச்சி உண்டு. புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். சகோதர, சகோதரி வகையில் சில மனக் கசப்புகள் வந்து நீங்கும். மனதில் அசாத்திய தைரியமும், துணிச்சலும் அதிகரிக்கும். ஆதலால் எந்த விஷயத்திலும் அதீத நம்பிக்கை தவிர்க்கவும். தாய் வழியில் அனுகூலமும், ஆசியும் உண்டு.
தாய்வழி உறவுகள் உதவிக்கரமாக இருப்பார்கள். வீடு, வாகன வசதியை மேம்படுத்துவீர்கள். தாய் உங்களுக்கு முக்கிய ஆலோசனை தருவார்கள். குழந்தைகள் விஷயத்தில் அதிக கவனம் தேவை. எதிர்காலம் பற்றிய வீண் கவலைகளும், தேவையற்ற சிந்தனைகளும் வேண்டாம். அவசர முடிவுகளை தவிருங்கள்.குடும்ப உறவில் நல்ல ஒற்றுமையும், துணையுடன் நெருக்கமும் அதிகரிக்கும்.
தொழில் மற்றும் உத்தியோகத்தில் சிறு, சிறுபிரச்னைகள் இருந்தாலும் அனைத்தையும் தாண்டி உங்கள் திறமையை வெளிப்படுத்துவீர்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டு. எதிர்பாராத தன லாபமும், அதிர்ஷ்டமும் உண்டாகும்.
சந்திராஷ்டம நாட்கள்: ஆகஸ்ட் 7, 8, 9.
பரிகாரம்: வியாழக்கிழமை தோறும் ஸ்ரீ முருகப்பெருமானை நினைத்து தியானியுங்கள்.
வாழ்வின் நெளிவு, சுளிவுகளை நன்கு அறிந்து செயல்படும் கன்னிராசி அன்பர்களே, உங்கள் ராசிநாதன் புதன் பகவான் உங்கள் ராசிக்கு 10ல் சஞ்சரிப்பதால் உங்கள் தனித்திறன் வெளிப்படும். இருப்பினும் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதை உணர்ந்து செயல்பட்டால் நல்லது. உங்கள் அறிவுத் திறமையால், தந்திரமான அணுகு முறையாலும் சூழ்நிலைகளை சாதூர்யமாக கையாண்டு வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்கள் இனிமையான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். மனதில் தைரியம், உற்சாகம் அதிகரிக்கும். உடன் பிறப்புகள் உதவிக்கரமாக இருப்பார்கள். அண்டை, அயலாரால் ஆதாயம் உண்டு. அரசு காரியங்கள் சாதகமாக முடியும். முக்கிய நபர்களின் சந்திப்பால் நன்மை பெறுவீர்கள். தாய் உடல் நிலை நலம் பெறும்.
உங்கள் ராசிக்கு பதினொன்றாவது வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதால் மிகவும் சாதகமான பயணமாக கிடைக்கும். நீங்கள் இறக்குமதி-ஏற்றுமதியில் தொழிலில் ஈடுபட்டிருந்தால் அல்லது பன்னாட்டு நிறுவனத்திலும் பணிபுரிந்தால், நன்மைகள் மற்றும் இலாபங்களும் ஏற்படும்.
கணவன் மனைவிக்குள் சிறு மன கசப்புக்கள் இருந்தாலும் புரிந்துணர்வு அதிகரிக்கும். மனைவி வழியில் தனவரவு உண்டு. தந்தையால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தந்தை உங்கள் உயர்வுக்கு சிறந்த வழி காட்டியாக இருப்பார். இருப்பினும் உணர்ச்சி வசப்படுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் உத்தியோகத்தில் மேன்மை உண்டாகும். உங்கள் செயல்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்.
சந்திராஷ்டம நாட்கள்: ஆகஸ்ட் 10, 11.
பரிகாரம்: புதன் கிழமைதோறும் விநாயகப் பெருமானுக்கு அறுகம் புல் மாலை சாத்தி வணங்கலாம்.
தன்னுடைய இனிமையான பேச்சால் மற்றவர்களை கவரும் துலாம் ராசி அன்பர்களே, உங்கள் ராசிநாதன் சுக்கிர பகவான் உங்கள் ராசிக்கு 8ல் ஆட்சி பெறுவதால் எதிலும் உயர்வு பெறும் காலம். உங்கள் தனித்திறன் வெளிப்படும். எதிலும் தடைகளை கடந்து வெற்றி பெறுவீர்கள். உங்கள் பலம் மற்றும் பல வீனம் அறிந்து செயல்படுவதால் ஆளுமை திறன் அதிகரிக்கும். முக்கியஸ்தர்களின் அறிமுகமும், நட்பும் கிடைக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு. குடும்ப விஷயத்தில் கவனம் தேவை. வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. பொருளாதார நிலையில் ஏற்றத் தாழ்வு உண்டாகும். குடும்ப தேவைக்காக கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம். மனதில் தைரியம், உற்சாகம் அதிகரிக்கும். எதிர்காலம் பற்றிய சந்தேகம் வந்து நீங்கும்.
ராசிக்கு 10ம் இடத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் தொழில் வாய்ப்புகள் மிக சிறப்பாக இருக்கும். இந்த அமைப்பு உங்கள் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றத்தை தரக்கூடியதாக இருக்கும். உங்கள் தலைமை மற்றும் நிர்வாக திறன்களை உயர வாய்ப்புள்ளது. நிலுவையிலுள்ள பணிகளை முடிக்கவும், புதிய பணிகளை செயல்திறனுடன் நிறைவேற்றவும் இந்த அமைப்பு உங்களுக்கு உதவக்கூடும். புதிய பதவிகள் உங்களுக்கு வழங்கப்படலாம்.
தந்தை மற்றும் அரசு நிறுவனங்களின் நன்மைகள் அடையக்கூடும். படித்து முடித்து அரசு வேலைத்தேடும் இளைஞர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது, சமூகத்தில் உங்கள் மீதான மரியாதை அதிகரிக்கும்புதிய ஒப்பந்தங்களை தவிர்ப்பது நல்லது. தந்தை வழியில் அனுகூலம் உண்டு. தந்தை உடல் நிலையில் பாதிப்பு வந்து நீங்கும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். இருப்பினும் பனிச்சுமை அதிகரிக்கும். நண்பர்கள் உதவிக்கரமாக இருப்பார்கள். வீண் பயணங்களை தவிர்ப்பது நல்லது.
சந்திராஷ்டம நாட்கள்: ஜூலை 16, 17. ஆகஸ்ட் 12, 13, 14.
பரிகாரம்: வெள்ளிக்கிழமைதோறும் உக்கிர பெண் தெய்வங்களை வழிபடுங்க
உங்கள் ராசிக்கு 9ம் இடத்தில் அதாவது பாக்கிய, தந்தை ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறது. இதனால் சில தேவையற்ற தாமதங்களையும் தொழிலில் சிரமங்களையும் சந்திக்க நேரிடும்.உங்கள் தந்தை அல்லது உங்கள் வழிகாட்டி நபர்களுடன் சிக்கல்கள் ஏற்படலாம். இந்த காலகட்டத்தில், சட்டத்தை மீறுவது பெரிய சிக்கலில் கொண்டு செல்லும். தொழில், வேலையில் தவறான குற்றச்சாட்டுகளில் சிக்கிக் கொள்ளலாம். பேச்சில், செயலில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குடும்பம் மற்றும் துணைவியுடன் பிரச்சினைகள் ஏற்படலாம்.
ஆராய்ச்சி திறனும், மறைமுக ரகசியங்களை வெளிப்படுத்துவதில் அதிக ஆர்வமும் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே, உங்கள் ராசிநாதன் செவ்வாய் பகவான் உங்கள் ராசிக்கு 5ல் சஞ்சரிப்பது எதிலும் ஏற்றம் பெறும் காலம். தெய்வ அனுகூலமும், ஆசியும் பெறும் காலமாகும். நல்ல அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு. குழந்தைகளின் செயல்பாடுகள் நண்பர் மற்றும் உறவினர்கள் மத்தியில் உங்களுக்கு உயர்வை பெற்று தரும். காதல் விஷயங்கள் வெற்றி பெறும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். எதிரிகளின் பலம் குறையும். உத்தியோகத்தில் பனிச்சுமை குறைந்து அமைதி நிலவும். திருமண பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். கணவன், மனைவிக்குள் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும். தம்பதியர்களுக்குள் புரிந்துணர்வு அதிகரிக்கும்.
வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் உண்டாகும். சிறு தடைகள் பிரச்னைகள் ஏற்படினும், அதனை தாண்டி வெற்றி பெறுவீர்கள். தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். தொழிலில் உயர்வு உண்டாகும். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள்.எந்தவொரு பயணத்தையும் குறிப்பாக ஆன்மீக பயணங்களைத் தவிர்க்கவும், வண்டி, வாகனங்களை ஓட்டும் போது கூடுதல் கவனம் தேவை. விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனம்.
சந்திராஷ்டம நாட்கள்: ஜூலை 18, 19, 20. ஆகஸ்ட் 14, 15, 16.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை தோறும் குரு பகவானை நினைத்து தியானியுங்கள், முருகப்பெருமானுக்கு விளக்கு ஏற்றுங்கள்.
நாளை தனுசு மகரம் கும்பம் மீன ராசி தொடரும்
மோகனா செல்வராஜ்