மேஷம்: திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும். பகல் 11.14 மணி முதல் ராசிக்குள் சந்திரன் வருவதால் பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.
ரிஷபம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவு கிட்டும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். உங்களை எதிர்ப்போரிடம் கூடக் கனிவாக பேசி சாதிப்பீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். உறவினர்களுக்கு உதவி செய்வீர்கள். அலுவலகத்தில் எதிர்பாராத வகையில் நண்பரின் சந்திப்பு நிகழும்.
மிதுனம்: சக ஊழியர்களால் சிறு சிரமங்கள் ஏற்படக்கூடும். சொன்ன சொல்லை காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும். பெண்கள் தொட்டது துலங்கும். கணவன், மனைவிக்கு இடையே மனவருத்தம் உண்டாகலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வது நல்லது.
கடகம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடிவடையும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். உற்சாகமான நாள்.