உடலை இரும்பாக்கும் இயற்கை சத்து உருண்டை

உடலை இரும்பாக்கும் இயற்கை சத்து உருண்டை கையில் வெண்ணெய் வைத்து கொண்டு நெய்க்கு அழைவது போல் இன்று நாம் எளிய பாரம்பரிய மருத்துவங்களை மறந்துவிட்டு ஆங்கில மருத்துவத்தை நாடி ஓடி கொண்டிருக்கிறோம்.


அந்த வரிசையில் நரம்பு தளர்ச்சி,கை,கால் நடுக்கம்,உடல் சோர்வு,உடல் பலவீனம் போன்றவைக்கு பல மருத்துவத்தை பார்த்து தனக்கு சரியாகவில்லை என கவலைப்படுபவர்கள் ஏராளம்.அவர்களுக்கு இந்த சத்து உருண்டை மிக பயன் உள்ளதாக இருக்கும்.


தேவையான பொருள்கள்


பாசி பருப்பு 50கி
வறுத்த வேர்க்கடலை 50கி
கருப்பு எள்ளு 50கி
கருஞ்சீரகம் 50கி
பூனைக்காலி பொடி 50கி
நிலபனங்கிழங்கு பொடி 50கி
வெல்லம் 350கி


முதலில் பாசிபருப்பு,கருஞ்சீரகம்,கருப்பு எள்ளு இவற்றை தனித்தனியாக வறுத்து எடுத்து கொள்ளவும்.பின் இதனுடன் வறுத்த வேர்க்கடலை சேர்த்து
அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நன்றாக பொடி செய்து கொள்ளவும்.


பின் இதனுடன் 350கி வெல்லம் சேர்த்து மீண்டும் அரைத்து கொள்ள வேண்டும்.பின் இதை ஒரு பாத்திரத்தில் கொட்டி கையினால் நன்றாக பிசைந்து கொள்ளவும்.


பின் இதனுடன் பூனைக்காலி பொடி,நிலபனங்கிழங்கு பொடி இரண்டையும் சேர்த்து நன்றாக பிசைந்து உருண்டை பிடிக்க வேண்டும்.


தேவைப்பட்டால் உருண்டை பிடிக்கும் போது நெய் சேர்த்து கொள்ளலாம்.


இந்த உருண்டையை காலை மாலை இரண்டு எடுத்து வர உடலும் நரம்புகள் வலுப்பெறும். நலமுடன் வாழ்வோம்