தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தின் தாயாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியானதை அடுத்து அவர் கிண்டி கிங் ஆய்வக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று 5,865 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது.
தமிழகத்தில் இன்றைய கரோனா பாதிப்பு குறித்த விவரங்களை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
இதன்படி, தமிழகத்தில் புதிதாக 6,972 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு 2,27,688 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து தகவல் வழங்காததால் நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். காய்ச்சல், சளி, அறிகுறிகளுடன் வந்தவர்கள் குறித்த விவரங்களை பதிவு செய்யாதது குறித்து விளக்கமளிக்க மருத்துவமனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.