இன்றைய ராசிபலன் 06/07/2020


மேஷம்: உணர்ச்சி வசப்பட்டு பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர் நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.


ரிஷபம்: அலுவலகத்தில் கடந்த நாட்களில் சந்தித்த பிரச்னைகள் அனைத்தையும் சமாளிப்பீர்கள். எதிர்கால சந்ததியினருக்காக சொத்துக்களை உருவாக்கும் முயற்சியில் நிச்சயம் வெற்றி காண்பீர்கள். கலைத்துறையினருக்கு  புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.


மிதுனம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை தலைதூக்கும்.உறவினர்களுடன் முன்கோபத்தால் பகை உண்டாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். சகிப்பு தன்மை தேவைப்படும் நாள்.


கடகம்: வாழ்வில் முன்னேற அதிகப்படியான வாய்ப்புகள் கிடைக்கும். உறவுகளிடையே வேண்டாத மனக்கசப்பு உருவாகலாம். அக்கம் பக்கத்தினரிடம் பகைக்காமல் இருப்பது நல்லது. பணப்புழக்கம் அதிகரிப்பதால் பழைய கடன்கள் அனைத்தையும் அடைப்பீர்கள்.

 

சிம்மம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களை விட அதிகாரிகளிடம் செல்வாக்கு கூடும். அமோகமான நாள்.

 

கன்னி : பல காலம் எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வந்து சேரும். அலுவலகத்தில் நட்பு வட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில சூட்சமங்களை கற்றுக் கொள்வீர்கள். மனதில் புத்துணர்ச்சி அதிகரிப்பதால் செயற்கரிய செயல்களை செய்து சாதனை செய்வீர்கள்

 

துலாம்: எதிர்ப்புகள் அடங்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். பயணங்களால் அலைச்சல்களுடன் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் லாபமும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

 

விருச்சிகம்: பிள்ளைகளின் உடல் நலனில் கூடுதல் அக்கறை காட்டுவது நல்லது. குடும்பப் பெரியவர்களிடம் வாக்குவாதம் செய்யாமல் அனுசரித்து சென்றால் அனுகூலமான நன்மைகளை பெறலாம். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

 

தனுசு: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். அழகும் இளமையும் கூடும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

 

மகரம்: பணியாளர்களின் முகத்தில் புன்னகை மிளிரத் துவங்கும். குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கியவர்களுக்கு வாரிசு உருவாகும். தோல்வியில் முடிந்த செயல்கள் வெற்றி அடைய ஆரம்பிக்கும். சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்புவர்.

 

கும்பம்: விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து செல்லும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

 

மீனம்: உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு பெறுவதற்கான சூழல் உருவாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு உண்டு. பெண்களுக்கு ஆடை, அணிகலன்கள் புதிதாகச் சேரும். வெளியூரில் இருக்கும் மகனின் மூலமாக நல்ல செய்தி கிடைக்கும்.

 

மோகனா  செல்வராஜ்

 

.