இன்றைய ராசிபலன் 05/07/2020


மேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தெய்வீக   ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.


ரிஷபம்: சந்திராஷ்டமம் இருப்பதால் திடீர் திடீரென்று எதையோ இழந்ததை போல் இருப்பீர்கள் உங்களை பற்றிய விமர்சனங்களைப் பற்றிப் பொருட்படுத்தாதீர்கள். அலுவலகத்தில் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டால் அது பலவகையில் நன்மை தரும். பெண்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடைய சிறிய அளவில் தாமதம் ஏற்படலாம்.


மிதுனம் : அலுவலக வேலைகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம். அக்கம் பக்கத்தினர் நயமாகப் பேசினாலும் பெண்கள் தங்கள் சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் ஏற்படும் சிறு சிறு நஷ்டங்களை தாங்கி கொள்வீர்கள்.


கடகம்: சமயோசிதமாகவும் சாதுர்யமாகவும் பேசி சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர் நண்பர்களால் நன்மை உண்டு. எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். மதிப்பு உயரும் நாள்.


சிம்மம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்பு தொல்லை குறையும். நட்பு வட்டம் விரியும் . செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். புண்ணியஸ்தலங்கள் சென்று வருவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் இருந்து வந்த பிரச்சினைகள் விலகும். கனவு நனவாகும் நாள்.


கன்னி: அலுவலகத்தில் நிறை, குறைகள் இருக்கும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்களிடையே சில மனவருத்தங்கள் உண்டாகி சரியாகும். கர்ப்பிணிகள் உணவு விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. திட்டமிட்ட செயல்களை எளிதாக முடிப்பீர்கள்.இன்று தொழில் வியாபாரம் சிறப்படையும்.


துலாம்: அலுவலக பணத்தை கையாளும்போது கவனத்துடன் இருப்பது அவசியம். வழக்கு விஷயங்களில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும். தாயார் உடல் நலம் காரணமாக சிறு சிறு அலைச்சல்கள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.


விருச்சிகம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.இன்று திறமையாக பேசுவதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். தெளிவான சிந்தனை இருக்கும். மாணவர்கள் பாடங்களை படிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். மனதில் உற்சாகம் உண்டாகும்.


தனுசு: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒருவித படபடப்பு வந்து செல்லும்..இன்று திடீர் கோபம் டென்ஷன் ஏற்படலாம். கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. வீண் அலைச்சல், மனக்குழப்பம் உண்டாகலாம். பணவரத்து இருக்கும். இழுபறியான காரியங்கள் சாதகமாக முடியும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.


மகரம்: இன்று தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். முக்கிய முடிவு எடுக்கும் போது தடுமாற்றம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் குறிக்கோள் இன்றி வேலை செய்ய வேண்டி இருக்கும். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் உண்டாகலாம்.


கும்பம்: மனதில் உற்சாகமும் செயல்களில் நேர்த்தியும் நிறைந்திருக்கும்.இன்று குடும்பத்தில் எதிர்பாராத திடீர் செலவு ஏற்படலாம். கணவன் மனைவிக் கிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் பக்குவமாக நடந்து கொள்வது நன்மை தரும். உறவினர்கள் நண்பர்கள் வருகை இருக்கும். 


மீனம்: தவறு செய்பவர்களை தட்டி கேட்பீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள் உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வீடுவாகனத்தை சீர் செய்வீர்கள். பழைய கடன்பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.


மோகனா  செல்வராஜ்