இன்றைய ராசிபலன் 04/07/2020


 


மேஷம்: கடந்த இரண்டு நாட்களாகஇருந்த அலைச்சல் டென்ஷன் கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். தொழில் உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.


ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் கொஞ்சம் அலைச்சலும் சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். இன்று தொழில் வியாபாரத்தில் சிறு தடங்கல்கள் சந்திக்க நேரும். எதிர்பார்த்த பணம் வருவது தாமதப்படும். வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த எடுக்கும் முயற்சிகள் நல்லபலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சிலர் புதியவேலைக்கு முயற்சி மேற்கொள்வார்கள். 


மிதுனம் : செய்யாத தவறுக்குக்கு பழி ஏற்க நேர்ந்தால் சற்று பொறுமையாக இருங்கள். வியாபாரத்தில் லாபம் திருப்திகரமாக இருக்கும். உழைப்பிற்கேற்ற பலன் இல்லை என்றாலும் கவலை கொள்ள வேண்டாம். பெண்கள் பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வர்.


கடகம்: நேற்றிருந்த அலைச்சலும், கோபமும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பெண்கள் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வர். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் முக்கியப் பொறுப்புகள் உங்களைத் தேடிவரும்.


சிம்மம்:இன்று பயணங்களால் நன்மை உண்டாகும். மனகுழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். சாமர்த்தியமான பேச்சின் மூலம்  காரிய அனுகூலம் ஏற்படும். குடும்பத்தினருடன் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு வரும். எதிலும் எச்சரிக்கையும் கவனமும் தேவை.


கன்னி: எதிர்ப்புகள் அடங்கும். பழைய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருடன் வீண் விவாதங்கள் வந்து போகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.


துலாம் : நீண்ட நாளாக இருந்து வந்த கண் வலி நீங்கும். கலைத்துறையினர் விமர்சனங்களைக் கண்டு பொறுமையை இழக்கும் சூழல் ஏற்படும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.


விருச்சிகம்:இன்று திறமையாக பேசுவதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். தெளிவான சிந்தனை இருக்கும். மாணவர்கள் பாடங்களை படிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். மனதில் உற்சாகம் உண்டாகும்.கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும்.


தனுசு: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை தாமதங்கள் ஏற்படும். உறவினர்கள் நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். விட்டு கொடுத்து செல்ல வேண்டிய நாள்.


மகரம்: மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். பெண்களுக்கு பணவரவு அதிகரிக்கும். விருப்பமானவர்களைச் சந்திப்பதால் மகிழ்ச்சி அடைவீர்கள். பணியை சிறப்பாக செய்து முடித்தாலும் அதில் சிலர் குறைகாண்பர். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும்.


கும்பம்:இன்று குடும்பத்தில் எதிர்பாராத திடீர் செலவு ஏற்படலாம். கணவன் மனைவிக் கிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் பக்குவமாக நடந்து கொள்வது நன்மை தரும். உறவினர்கள் நண்பர்கள் வருகை இருக்கும். எதையும் சாதிக்கும் துணிச்சல் பிறக்கும்.


மீனம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.  


மோகனா  செல்வராஜ்