இன்றைய ராசிபலன் 02/07/2020


மேஷம்: சந்திராஷ்டமம்  இருப்பதால் சிலர் உங்களை சீண்டிப் பார்ப்பார்கள். உடனே உணர்ச்சிவசப்பட்டு கத்தாதீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்சினை வந்து நீங்கும். வேலைச்சுமை மிகுந்த நாள்.


ரிஷபம்: இன்று வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். புத்திர வழியில் அனுகூலம் ஏற்படும். பொன் பொருள் சேரும். பழைய கடன்கள் குறையும். அமைதி நிலவும்.


மிதுனம் : மன தைரியம் அதிகரிக்கும். திட்டமிட்ட சுபநிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறும். உத்யோகத்தில் இருக்கும் தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். தந்தைக்கு இருந்த உடல் நலக்கோளாறுகள் நீங்கி நலம்பெறுவார்.


கடகம்: உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நட்பால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.


சிம்மம்: இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பெற்றோருடன் மனஸ்தாபம் உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்தால் ஒற்றுமையாக இருக்கலாம். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வியாபாரத்தில் முன்னேற்றம் காணலாம்.


கன்னி: உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புதுவாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். வெற்றிக்கு வித்திடும் நாள்.


துலாம்: எதிர்கால நலனுக்காக திட்டமிடுவீர்கள். குடும்பச் செலவுகள் சற்று அதிகரிக்கும். திடீர்ப் பயணங்களால் அலைச்சல் கூடும். அலுவலக நண்பர்களால் சில பிரச்னைகளை சந்தக்க நேரிடலாம். வியாபாரத்தில் உள்ள பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள்.


விருச்சிகம்: இன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்கள் வழியாக மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். நீங்கள் எதிர்பார்த்த உதவி இன்று உங்களுக்கு கிடைக்கும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த நல்ல வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் நெருக்கடிகள் குறைந்து லாபங்கள் அதிகரிக்கும்.


தனுசு: கணவன், மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பெண்களுக்கு திடீர் பணவரவு உண்டு. அலுவலகத்தில் சில புதிய முடிவுகள் எடுப்பீர்கள். நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென்று நினைத்த இடத்திற்கு செல்வீர்கள் வியாபாரத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.எதிர்காலம் பற்றிய பயம் வீண் டென்ஷன் வந்து செல்லும்.


மகரம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். மதிப்பு கூடும் நாள்.


கும்பம்: பிள்ளைகள் உங்களின் அருமையை புரிந்து கொள்வார்கள். மனைவி விரும்பிய பொருட்களை வாங்கித் தருவீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். பூர்வ சொத்தின் மூலம் ஆதாயம் உண்டு.


மீனம்: இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். வெளியூர் பயணங்களால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிட்டும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் வருமானம் பெருகும்.


 மோகனா  செல்வராஜ்