இன்றைய ராசிபலன் 01/07/2020


மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். பணப்பற்றாக் குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டிவரும். வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.


ரிஷபம்: எல்லோரிடமும் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வீர்கள். சுபநிகழ்ச்சிகள் பற்றிய பேச்சு வார்த்தைகள் சுமூகமாக முடியும். புதிய வேலைவாய்ப்பை எதிர் நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைப்பதில் சிறிய அளவில் தாமதம் ஏற்படலாம்.சுபநிகழ்ச்சிகள் பற்றிய பேச்சு வார்த்தைகள் சுமூகமாக முடியும்.


மிதுனம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும்.இன்று டென்ஷன், வீண் அலைச்சல், காரிய தாமதம் போன்றவை உண்டாகலாம். தொழிற்பிரச்சனை கல்வியில் தடை போன்றவை விலகும். எதிலும் நன்மை உண்டாகும். கலை இலக்கியத்தின் மீது  ஆர்வம் அதிகரிக்கும். 


கடகம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வேற்று மதத்தவர் உதவுவார். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். நினைத்தது நிறைவேறும் நாள். சுபச் செலவுகள் கூடும்.


சிம்மம் : அலுவலகத்தில் இருந்து நல்ல தகவல்கள் வரும். பெண்களின் பயம் நீங்கும்படியான மாற்றங்கள் நிகழும். குடும்ப ஒற்றுமை மேம்படும். வியாபாரத்தில் உள்ள போட்டிகளை சமாளிப்பீர்கள். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். 


கன்னி: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பேச்சில் முதிர்ச்சி இருக்கும்இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக  பணிகளை கவனிப்பது நல்லது. எதிர்பாராத இடமாற்றம் சிலருக்கு உத்தியோக மாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவு உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே திடீர் மனவருத்தம் ஏற்படலாம். 


துலாம் : உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். சமூகத்தில் கௌரவம் உயரும். தாமதப்பட்ட பல செயல்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். தாயின் உடல் நலம் சரியாகும். பெண்கள் ஆடை, ஆபரணங்களை பரிசாக பெற்று மகிழ்ச்சி கொள்வர். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இனிமையான நாள்.


விருச்சிகம்: எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்த பிறகே முடிவெடுக்கவும்இன்று மாணவர்கள் தடைகளை தாண்டி கல்வியை கற்க செய்யும் முயற்சி வெற்றி பெறும். சிறப்பாக  படித்து முடிப்பீர்கள். வேலையில் இழுபறி, வீண் அலைச்சல் போன்றவை உண்டாகும். கவனம் தேவை. தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.


தனுசு: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது.  மனதில் இருந்த பயம் நீங்கும்படியான சம்பவங்கள் நிகழும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள்.வியாபாரத்தில் இதுவரை இருந்த அலைச்சல் மற்றும் மனஅழுத்தம் குறையும். குடும்பத்தில் நிம்மதியான சூழல் உருவாகும். உத்யோகத்தில் பாதியில் நின்ற வேலைகள் முடியும்.


மகரம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். பிள்ளைகளின் மனநிலையை உணர்ந்து கொள்வீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். பாராட்டு கிடைக்கும் நாள்.


கும்பம்: குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களை புரிந்து கொள்ளவில்லை என்ற ஆதங்கம் தீரும். வியாபாரத்தில் இழப்புகள் குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ளாதபடி வளைந்து கொடுப்பீர்கள். பொழுது போக்கு அம்சங்கள் மகிழ்ச்சி தரும்.


மீனம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். உற்சாகமான நாள்.தெய்வ வழிபாடு மனஅமைதி தரும்.


மோகனா  செல்வராஜ்