சிதம்பரம் நடராஜர் கோவில்-தீட்சிதர்கள் கொரோனா தொற்று


 


உலக புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் ஆரூத்ரா தரிசன விழாவும், ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சன தரிசன விழாவும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.


இந்த ஆண்டு ஊரடங்கு உத்தரவால் ஆனி திருமஞ்சன திருவிழா எளிமையான முறையில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது.


கோவிலின் நான்கு வீதிகளில் கீழ வீதி தவிர மற்ற மூன்று வீதியின் வாயில்கள் வழியே பொதுமக்கள்  செல்ல முடியாதவாறு தடுப்புகள் அமைத்து அடைக்கப்பட்டுள்ளன. கீழ வீதி வழியாக கொடி ஏற்றுவதற்கு தேவையான தீட்சிதர்கள் மட்டுமே  உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.


ஆனி திருமஞ்சன திருவிழா நடத்துவதற்காக தீட்சிதர்கள் 150 பேருக்கு நேற்று கொரோனா பரிசோதிக்கப்பட்டது.  சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.